Advertisment

குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் மரணம்: விசாரணைக்கு உத்தரவு

குரங்கு அம்மைககு இந்தியாவில் பலியான முதல் உயிர் இதுதான்.

author-image
WebDesk
New Update
monkeypox

monkeypox

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். வீடு திரும்பியதும், அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடினார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மரணித்தார்.
அவரது உடல் குரங்கு அம்மை பாதிப்பாளர்களின் மரணம் தொடர்பான நிலையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதி அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தத் தகவலை கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்-ம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவவில்லை, உயிரிழப்பும் பெரிதளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கு அம்மைககு இந்தியாவில் பலியான முதல் உயிர் இதுதான். ஆப்பிரிக்காவுக்கு வெளியே இது 4ஆவது உயிரிழப்பு ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment