உற்பத்தி துறையில் சரிவு காரணமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5% சதவீதமாக சரிந்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இப்போது தொடர்ச்சியாக ஆறாவது காலாண்டாக குறைந்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் 2013 இல் 4.3% என்பதே மிகக் குறைந்த ஜி.டி.பி.யாக இருந்தது.
மொத்த மதிப்பு கூட்டப்பட்ட ஜூலை-செப்டம்பர் வளர்ச்சி விகிதத்தில் (ஜி.வி.ஏ), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கழித்தால் நிகர உற்பத்தி வரி. இது ஒரு வருடத்திற்கு முன்பு 6.9% இருந்த நிலையில் 4.3% குறைந்துள்ளது. இதன் மூலம், இந்த நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக உள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 7.5 சதவீதமாக இருந்தது.
சமீபத்திய காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பொருளாதார விரிவாக்கத்தை அதிகரிப்பதற்காக ஒரு மெகா கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை அறிவிக்க அரசை தூண்டியுள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகளின்படி, உற்பத்தி துறையில் ஜி.வி.ஏ வளர்ச்சி இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 6.9 சதவீத விரிவாக்கத்திலிருந்து 1 சதவீதம் சுருங்கியது. அதேசமயம், பண்ணைத் துறையின் ஜி.வி.ஏ வளர்ச்சி 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 4.9 சதவீதமாக இருந்தது.
கட்டுமானத் துறையின் ஜி.வி.ஏ வளர்ச்சி முன்னதாக 8.5 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாகக் குறைந்து. சுரங்கத் துறை வளர்ச்சி 0.1 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளின் வளர்ச்சியும் ஒரு வருடத்திற்கு முன்பு 8.7 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல, வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சேவைகள் தொடர்பான ஒளிபரப்பு வளர்ச்சி ஆகியவற்றில் இரண்டாவது காலாண்டில் 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 6.9 சதவீதமாக இருந்தது.
நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகளின் வளர்ச்சி 2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 7 சதவீதமாக இருந்தது. மறுபுறம், பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் 11.6 சதவீதம் உயர்ந்து முன்னேற்றம் கண்டன.
நாட்டின் வளர்ச்சி சதவிகிதம் சரிவு குறித்து பாஜகவை காங்கிரஸ் “குறைந்து வரும் வளர்ச்சி சதவீதம் மோடி பொருளாதாரம் மற்றும் ‘பக்கோடா பொருளாதார பார்வை’ ஆகியவற்றின் பிரதிபலிப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுஜிவாலா கூறுகையில், “பாஜகவைப் பொறுத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தியானது “கோட்ஸே பிரிவினை அரசியல்” என்று குற்றம் சாட்டினார்.
“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% வீழ்ச்சியடைந்துள்ளது. நாம் ஒரு மெய்நிகர் தடையில்லாத வீழ்ச்சியில் இருக்கிறோம். இது கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காலாண்டாகும். ஆனால், பாஜக ஏன் கொண்டாடுகிறது? ஏனென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றிய அவர்களின் புரிதல் கோட்சேவின் பிரிவினை அரசியல்தான்.” என்று டுவிட்டரில் தெரிவித்துள்லார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 25வது காலாண்டில் 5 சதவீதமாக குறைந்தது.
மாநிலங்களவையில் புதன்கிழமை, பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்த எதிர்க்கட்சியின் கருத்துக்களை எதிர்த்தார். வளர்ச்சி குறைந்துவிட்டிருக்கலாம், ஆனால் பொருளாதாரம் ஒருபோதும் மந்தநிலையை அடையாது என்று கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்துடன் (2009 -2014) ஒப்பிடும்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் 2014 -2019 ஆட்சிக் காலத்தின் பேரியல் பொருளாதார தரவை ஒப்பிட்டு பார்த்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்க வீதம், அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு இருப்புக்கள் அதிக அளவில் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அதிகமாக இருந்தது. பணவீக்கம் மிகவும் குறைவாக இருந்தது என்றும் அவர் கூறினார்.