Advertisment

குழந்தைகளில் கோவிட்-19 இந்தியாவின் வழிகாட்டுதல்கள்: ரெம்டெசிவிர் பயன்படுத்தக் கூடாது

குழந்தைகளிடையே காணப்படும்அறிகுறி இல்லாத தொற்றுநோய்க்கு, வழிகாட்டுதல்கள் குறிப்பிட்ட மருந்துகளை பரிந்துரைக்கவில்லை. மேலும், கோவிட்டுக்கு உரிய நடவடிக்கைகளான (முகக்கவசம் அணிதல், கடுமையான கை சுகாதாரம், தனிநபர் இடைவெளி ) ஆகியவற்றை ஊக்குவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
coronavirus, chennai news, new in Tamil, covid19

குழந்தைகளிடையே கோவிட் 19 தொற்றை நிர்வகிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அரசு கொண்டு வந்துள்ளது. அதில் ரெம்டெசிவிர் பரிந்துரைக்கப்படவில்லை. அதே நேரத்தில், தேவையின் அடிப்படையில் ஹெச்.ஆர்.சி.டி ஸ்கேன் பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisment

சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும்சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டி.ஜி.ஹெச்.எஸ்) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், அறிகுறி இல்லாத தொற்று மற்றும் லேசான தொற்றுகளில் ஸ்டீராய்டுகள் பயன்பாடு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளது.

கடுமையான மேற்பார்வையின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிதமான, கடுமையான மற்றும் மோசமான கோவிட்-19 தொற்றுநோயாளிகளுக்கு மட்டுமே டி.ஜி.ஹெச்.எஸ் ஸ்டீராய்டுகளை பரிந்துரைத்துள்ளது.

“ஸ்டீராய்டுகள் சரியான நேரத்தில், சரியான அளவு மற்றும் சரியான காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஸ்டீராய்டுகளை சுயமாக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று டி.ஜி.ஹெச்.எஸ் கூறியுள்ளது.

மேலும், இந்த வழிகாட்டுதல்கள் ரெம்டெசிவிர் (அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்து ) மருந்தை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

ஏனென்றால், “18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ரெம்டெசிவிர் தொடர்பாக போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவு இல்லை” என்று இந்த வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 நோயாளிகளுக்கு நுரையீரல் செயல்பாட்டின் அளவையும் தன்மையையும் காண உயர்-தெளிவுத்திறன் கொண்ட சிடி ஸ்கேன் (HRCT) பரிசோதனை மருத்துவ தேவையின் அடிப்படையில் பயன்பாட்டுக்கு வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்துள்ளன.

இருப்பினும், மார்பின் ஹெச்.ஆர்.சி.டி ஸ்கேன் மூலம் பெறப்பட்ட கூடுதல் தகவல்கள் பெரும்பாலும் சிகிச்சை முடிவுகளில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை கிட்டத்தட்ட முற்றிலும் மருத்துவ தீவிரம் மற்றும் உடலியல் குறைபாட்டை அடிப்படையாகக் கொண்டவை.

“எனவே, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு மார்பின் HRCT ஸ்கேன் இமேஜிங் செய்வதற்கு மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்” என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 ஒரு வைரஸ் தொற்று என்றும் சிக்கல் இல்லாத கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதிலோ அல்லது சிகிச்சையளிப்பதிலோ நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிகுறி இல்லாத மற்றும் லேசான அறிகுறியுள்ள தொற்று நோயாளிகளுக்கான வழிகாட்டுதல்கள் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை அல்லது நோய்த்தடுப்பு சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படவில்லை. அதே நேரத்தில், அதிகமான தொற்றுநோய்க்கான மருத்துவ சந்தேகம் இல்லாவிட்டால். மிதமான மற்றும் கடுமையான நோயாளிகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிப்பது பல மருந்துகளின் எதிர்ப்பு பூஞ்சைகள் சுகாதாரத்துடன் தொடர்புடைய தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

குழந்தைகளிடையே காணப்படும்அறிகுறி இல்லாத தொற்றுநோய்க்கு, வழிகாட்டுதல்கள் குறிப்பிட்ட மருந்துகளை பரிந்துரைக்கவில்லை. மேலும், கோவிட்டுக்கு உரிய நடவடிக்கைகளான (முகக்கவசம் அணிதல், கடுமையான கை சுகாதாரம், தனிநபர் இடைவெளி ) ஆகியவற்றை ஊக்குவித்துள்ளது. அதோடு, சத்தான உணவைக் கொடுக்க பரிந்துரைத்துள்ளது.

லேசான நோய்த்தொற்றுக்கு, காச்சலுக்கு பாராசிட்டமால் 10-15 மி.கி/ டோஸ் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கு கொடுக்கலாம். இருமலுக்கு வளர்ந்த குழந்தைகளுக்கு தொண்டை இதமாக இருக்க சூடான உப்பு தண்ணீர் கொப்பளிக்க கொடுக்கலாம் என்று வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.

ஒருவேளை மிதமான தொற்று ஏற்பட்டால் உடனடியாக ஆக்ஸிஜன் சிகிச்சையைத் தொடங்க வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்துள்ளன.

“மிதமான நோய் உள்ள அனைத்து குழந்தைகளிலும் கார்டிகோஸ்டீராய்டுகள் தேவையில்லை; அவை விரைவாக நோய்களின் முன்னேற்றத்தை நிர்வகிக்கலாம் மற்றும் ரத்தம் உறைவதைத் தடுப்பதை நிர்வகிப்பதையும் குறிப்பிடலாம்”என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

குழந்தைகளிடையே கடுமையான கோவிட்-19க்கு, கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) உருவானால் தேவையான மருத்துவ சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

“அதிர்ச்சி ஏற்பட்டால், தேவையான பராமரிப்பு தொடங்கப்பட வேண்டும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மேலதிக பாக்டீரியா தொற்றுக்கான சான்றுகள் / வலுவான சந்தேகம் இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். உறுப்பு செயலிழந்தால் உறுப்பு ஆதரவு தேவைப்படலாம். எ.கா. சிறுநீரக மாற்று சிகிச்சை” என்று அது கூறியுள்ளது.

பெற்றோர்கள் / பாதுகாவலர்களின் மேற்பார்வையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆறு நிமிட நடை பரிசோதனைக்கு வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்துள்ளன.

“இது இதயம் ஆக்ஸிஜனை எடுத்துகொள்ளும் திறனை மதிப்பிடுவதற்கான எளிய மருத்துவ பரிசோதனையாகும், மேலும், இது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தெரிந்துகொள்வதற்கு பயன்படுகிறது. ஒரு ஆக்சிமீட்டரை குழந்தையின் விரலில் இணைத்து, குழந்தையை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து தங்கள் அறைக்குள் நடக்கச் சொல்லுங்கள்”என்று வழிகாட்டுதல்கள் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Covid 19 In India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment