இந்திய தயாரிப்பான ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது கூடுதல் சிறப்பு.

இந்திய ராணுவ ஆய்வு சார்பில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் டி.ஆர்.டி.ஓ சார்பில், ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களுக்கு ருஸ்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பில் வெளியான ருஸ்டம்-2 விமானத்தின் சோதனை ஓட்டம் கர்நாடகவில் உள்ள சலக்கேரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

நேற்று(25.2.18) நடைபெற்ற இந்த சோதனை ஒட்டத்தை, மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், டி.ஆர்.ஓ.டி. தலைவருமான கிறிஸ்டோபர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். ஏற்கனவே, ருஸ்டம்-1 என்ற விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், ருஸ்டம்-2 என்ற ஆளில்லா விமானத்தின் சோதனையும் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது.

அமெரிக்காவின் பிரிடேட்டர் ஆளில்லா விமானத்துக்கு சமமான தரத்தில் இந்த ருஸ்டம்-2 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிரிகளின் இடங்களை கண்காணிப்பதுடன், ஆயுதங்களையும் சுமந்து செல்லும் நோகில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ருஸ்டம்-2 விமானத்தின் சிறப்பு திறனே, தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது கூடுதல் சிறப்பு.
நடுத்தர உயரத்தில், நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்த இந்த ருஸ்டம்-2 விமானம். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close