/tamil-ie/media/media_files/uploads/2022/08/Pulse.jpg)
முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அதிக கால எம்எல்ஏவாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். புதுப்பள்ளி தொகுதியிலிருந்து, போட்டியிட்டு வெற்ற இவர் கடந்த 51 வருடங்கள் மற்றும் மூன்று மாதங்களாக எம்எல்ஏவாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். இவரது அரசியல் வாழ்க்கை 1970களில் தொடங்கியது. 11 முறை நேரடியாக தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் கே.எம் மணியின், சாதனையை முறியடைத்துள்ளார். கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எம் மணி 50 வருடங்களாக பாலா தொகுதியில் வெற்றிபெற்று எம் எல் ஏவாக பணியாற்றினார். இவர் 1965 முதல் 2016 வரை பணியாற்றினார். இவர் 13 தேர்தல்களில் வெற்றுபெற்றுள்ளார். இவர் 1965ம் ஆண்டில் வெற்றிபெற்றாலும். இரண்டு வருடங்கள் கழித்து மக்களவையில் பணியாற்ற தொடங்கினார். அப்போது கேரள மாநிலம் ஜனாதிபதி ஆட்சியில் இருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கண்பத்ரோ தேஷ்முக், 11வது முறையாக 2019-ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். இவர் மகாராஷ்ராவில் உள்ள சன்கோலாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு 54 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறார்.
தமிழக முன்னாள் முதலவர் கருணாநிதி, 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒரு தோல்வியைகூட சந்தித்ததில்லை. 13 தேர்தலில் வெற்றிபேறுள்ளார். இவர் 1954-ம் ஆண்டு குளித்தலை தொகுதியிலிருந்து முதல் தேர்தலை சந்திதார்.
சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஹசிம் அப்துல் ஹலிம், அதிக நாட்கள் சபாநாயகராக பணியாற்றி உள்ளார். 1982 முதல் 2011 வரை அவர் மேற்க்கு வங்க சட்டமன்றத்தின் சபநாயகராக இருந்தார்.
மக்களவை
சிபிஎம் கட்சியை சேர்ந்த இந்த்ரஜித் குப்தா 11 முறை மக்களை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேற்கு வங்கத்திலிருந்து போட்டியிட்டியிட்டார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் 10 முறை பொதுத் தேர்தலில் வெற்றுபெற்றுள்ள முதல் பாஜக தலைவர் மற்றும் ஜனதா கட்சியின் தலைவருமாவார். இவர் லக்நோவிலிருந்து வெற்றுபெற்று 1991 முதல் 2009 வரை ஆட்சி செய்தார். இதற்கு முன்பாக இவர் பல்ராம்பூர் ( 1957 -62 மற்றும் 1976-71) , குவாலியர் ( 1972-77 மற்றும் டெல்லி ( 1977-84) ஆகிய தொகுதியில் போட்டியிட்டர்.
சிபிஎம் தலைவர் மற்றும் முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி 10 முறை தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இவர் 1984ம் ஆண்டு மம்தாவிடம் தோல்வியடைந்தார். அப்போது மம்தா காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜாதாவ்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.