ஆப்பிரிக்க யானைகள் அல்லது ஆசிய யானைகள் என அனைத்து யானைகளும் சமூக விலங்குகள் என்றாலும், அவற்றின் வருங்கால துணையைத் தேடுவது என்பது பணம், சட்டம், போக்குவரத்து, முக்கியமாக, நெறிமுறைக் கருத்துகளின் நடைமுறைச் சிக்கலில் புதைந்து கிடக்கிறது. துனை கிடைப்பது என்பது குறிப்பிடுவதற்கு இல்லை.
டெல்லி மற்றும் மைசூருவில் உள்ள உயிரியல் பூங்காக்கள் உச்ச கட்டத்தில் போராடி வருகின்றன. அவற்றால் நாட்டிலுள்ள இரண்டு ஆப்பிரிக்க யானைகளான ஷங்கர் மற்றும் ரிச்சிக்கு துணையைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றன.
2001-ம் ஆண்டு முதல் டெல்லி விலங்கியல் பூங்காவில் ஒரு பெண் யானை இறந்ததையடுத்து, 27 வயதுடைய யானை சங்கர், இந்த விலங்கியல் பூங்காவில் ஒரே ஆப்பிரிக்க யானையாக இருந்து வருகிறது.
மைசூரு விலங்கியல் பூங்காவில், ரிச்சி என்ற ஆப்பிரிக்க ஆண் யானை அதன் 20-களில் உள்ளது, அதன் தந்தை டிம்போ இறந்த பிறகு 2016 முதல் தனியாக உள்ளது. ஆப்பிரிக்க யானைகள், நிலத்தில் வாழும் மிகப்பெரிய பாலூட்டிகள். இவை ஆசிய யானைகளிலிருந்து வேறுபட்டவை. சங்கர் மற்றும் ரிச்சி இரண்டும் ஆசிய யானைகளிலிருந்து தனித்தனியாக அந்தந்த உயிரியல் பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஆப்பிரிக்க அல்லது ஆசிய யானைகள் என அனைத்து யானைகளும் சமூக விலங்குகள். இந்த கட்டுரை யானையின் வருங்கால துணையை தேடுவதைப் பற்றி விளக்குகிறது. இருப்பினும், இந்த பிரச்சினை பணம், சட்டம், தளவாடம், முக்கியமாக, நெறிமுறைக் கருத்துகளின் நடைமுறை சிக்கல்களுக்குள் புதைந்துவிட்டது. துணை கிடைப்பது என்பது குறிப்பிடுவதற்கு இல்லை.
1970-களில் ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஆப்பிரிக்க யானைகளுக்கு மைசூர் உயிரியல் பூங்காவில் ரிச்சி பிறந்தது. ஷங்கர் காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட யானை. 1998-ல் ஜிம்பாப்வேயில் இருந்து தூதரகப் பரிசாக இந்தியாவுக்கு வந்த இரண்டு யானைகளில் ஒன்று.
2021-ம் ஆண்டில், மற்ற ஆப்பிரிக்க யானைகள் வசிக்கும் சரணாலயத்திற்கு சங்கரை மாற்றக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரர் நிகிதா தவான், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவை அணுகலாம் என்று கூறியது. யானை மீட்பு அல்லது மறுவாழ்வு மையங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூலம் காட்டு விலங்குகளை மாற்றுவது அல்லது இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்புதல்கள், தகராறுகள் அல்லது குறைகளை பரிசீலிப்பதற்காக இந்த குழு மார்ச் மாதத்தில் வேறு ஒரு வழக்கில் அமைக்கப்பட்டது. அதை எப்படி அணுகுவது என்று யோசித்து வருவதாக தவான் கூறினார்.
இதற்கிடையில், டெல்லி உயிரியல் பூங்காவில், ஷங்கரின் துணையை தேடும் பணி தொடர்கிறது. மற்றொரு ஆப்பிரிக்க யானையை கொண்டு செல்வதற்கான நிதியை பெறுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் உதவி கோரி ஒரு திட்டத்தை தயார் செய்துள்ளோம் என்று உயிரியல் பூங்கா இயக்குனர் அகன்ஷா மகாஜன் தெரிவித்தார்.
தகவல் அனுப்புதல்
யானை எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. “நாங்கள் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். அமைச்சகத்திடம் இருக்கக்கூடிய கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) ஆதாரங்கள் மூலம் நிதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் உதவி கோருவதற்கு ஒரு முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்தத் தொகையை நிதியளித்தால், வேறு உயிரியல் பூங்காவில் இருர்ந்து ஒரு வெளிநாட்டு விலங்கைப் பெறலாம். நாட்டில் விலங்குகல் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ள சில ஏஜென்சிகள் உள்ளன. ஆனால், இது போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கும். சங்கரின் அதே வயதுடைய பெண் யானைக்கு, போக்குவரத்து செலவு அதிகமாக இருக்கும். மேலும், இது சுமார் 1 கோடி ரூபாய் வரை வரலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உதவத் தயாராக இருப்பவர்களிடமிருந்து முறையான ஒப்புதலைப் பெற்றவுடன், நாங்கள் தொடரலாம். ஏனென்றால், யானை ஒரு சமூக விலங்கு” என்று மகாஜன் விளக்கினார்.
உயிரியல் பூங்கா அதிகாரிகளின் கருத்துப்படி, ஒரு பெண் ஆப்பிரிக்க யானைக்கான கோரிக்கை Species360 தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மற்றவற்றுடன், உலகெங்கிலும் உள்ள மிருகக்காட்சிசாலைகளில் தேவைப்படும் மற்றும் கிடைக்கும் விலங்குகள் பற்றிய தகவல்களை நிர்வகிக்கிறது.
உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களின் சங்கம் (WAZA), ஐரோப்பிய உயிரியல் பூங்காக்கள் மற்றும் அக்வாரியா சங்கம் (EAZA) மற்றும் சர்வதேச உயிரியல் பூங்கா சேவைகளுக்கும் இந்த தகவல் அனுப்பப்பட்டது. ஏப்ரல் மாதம், EAZA Ex Situ Programs (EEP) பிரதிநிதி, அவர்களிடம் பொருத்தமான யானை இல்லை என்று பதிலளித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், பெண் யானையை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. அப்போது, "யானையை தென்னாப்பிரிக்காவிற்கு கொண்டு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
யானைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை ஆய்வு செய்து, யானையை இடம் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (CZA) மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI) ஆகியோருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேசிய பூங்கா அல்லது சரணாலயத்திற்கு. வனவிலங்கு நிபுணர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.
கடந்த ஆண்டு நவம்பரில் CZA தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், CZA மற்றும் AWBI ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் திட்டப் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆகியோர் அடங்கிய குழு தயாரித்த அறிக்கையும் அடங்கியுள்ளது.
இயற்கைத் தேர்வு
“வேறுபட்ட பரிணாம வரலாறு, ஆசிய யானையிலிருந்து வேறுபட்ட தோற்றம், வெவ்வேறு வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் நிலைமை மற்றும் அது ஒரு அந்நிய இனம் ஆகியவற்றின் காரணமாக இந்த யானையை இந்தியாவில் உள்ள தேசிய பூங்கா அல்லது இந்திய வாழ்விடங்களான சரணாலயத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று இந்த குழு கூறியது.
ஒரு பெண் ஆப்பிரிக்க யானையை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, குழு விசாரித்து வருகிறது. “ஆப்பிரிக்க யானைகள் வலுவான சமூக அமைப்பு மற்றும் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளன. எனவே, குழுவில் ஒரு பெண் இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பல பெண்களைக் கொண்டிருப்பது ஆண் யானைக்கு சிறந்த தொடர்பு மற்றும் மரபணு மாறுபாட்டை அதிகரிக்கும்.”
“குறைந்தது இரண்டு தொடர்பில்லாத, இணக்கமான பெண் யானைகளை (ஒரு வயது வந்த யானை மற்றும் ஒரு துணை வயது வந்த யானை) ஒரு துணை வயது வந்த ஆணுடன் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குழு பரிந்துரைத்துள்ளது. சங்கருடன் விலங்குகளை ஒருங்கிணைப்பது படிப்படியாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றின் மந்தைகளின் இணக்கத்தன்மை மற்றும் சமூக அமைப்புக்கு ஏற்ப வீட்டுவசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், உயிரியல் பூங்காவில் இந்த கூடுதல் விலங்குகளைப் பெற்றால், கூடுதல் பகுதி CZA வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்.
கூடுதல் விலங்குகளை உயிரியல் பூங்காவுக்குள் கொண்டு வர வேண்டுமா?
கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றத்தில் தவான் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவில் “ஏற்கனவே மன்னிக்க முடியாத சூழலில் மேலும் யானைகளைச் சேர்த்து இறக்குமதி செய்வது மேலும் இரண்டு விலங்குகளின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் கெடுக்க வழிவகுக்கும். மேற்கூறியவை இருந்தபோதிலும், ஆப்பிரிக்க யானைகளை ஒருவர் தங்கள் துணையை மற்றும்/அல்லது தங்கள் மந்தைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. இது இயற்கையான தேர்வின் செயல்முறை மற்றும் கட்டாயப்படுத்த முடியாது.” என்று கூறியுள்ளார்.
அதன் வாய்ப்புகளை ஆராய்ந்து, டெல்லி உயிரியல் பூஞ்கா ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த ஏஜென்சி விலங்குகளின் போக்குவரத்துக்கு உதவுகிறது. எந்த ஏற்பாடும் எட்டப்படவில்லை.
காட்சி தொடர்பு
"விலங்கின் அளவைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து சிக்கல்களைக் கையாள்வதைத் தவிர, சுகாதார நெறிமுறை நிறைவேற்றப்பட வேண்டும். இது எளிதானது அல்ல, அதிக காலம் எடுக்கும். மற்ற நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களுடன் சோதனை செய்வதற்கான ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்” என்று ஐதராபாத்தில் உள்ள ஏஜென்சியின் ராகேஷ் வர்மா கூறினார். குஜராத்தின் கேவாடியாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு விலங்குகளை கொண்டு செல்வதில் இந்த ஏஜென்சி ஈடுபட்டுள்ளதாக வர்மா கூறினார்.
மைசூரு உயிரியல் பூங்காவும் மற்றொரு ஆப்பிரிக்க யானையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மைசூரு உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது: “நம்முடய நாட்டின் கால்நடைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உயிரியல் பூங்காக்களிடம் பெண் யானையை அனுப்புவது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் ஒரு விலங்கைக் காப்பாற்றுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உயிரியல் பூங்காக்களின் சங்கங்கள் உள்ளன. அவைகள் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட உயிரியல் பூங்காக்கள் அல்ல.” என்று கூறினார்.
மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய யானைகளுடன் ரிச்சிக்கு காட்சி தொடர்பு இருப்பதாக இந்த அதிகாரி தெரிவித்தார். ரிச்சி அந்த யானைகளைப் பார்க்க முடியும்… குறைந்த பட்சம் யாரோ இருக்கிறார்கள் என்று உணர்ந்துகொள்ளும்” என்று கூறினார்.
ஒரு விலங்கு கொண்டு வர CITES அனுமதி தேவைப்படும், CZA மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் ஒப்புதல்கள் தவிர, டெல்லி உயிரியல் பூங்காவின் மகாஜன், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் சான்றுகளும் சரிபார்க்கப்படும் என்று கூறினார். CITES என்பது பலதரப்பு உடன்படிக்கையான காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டைக் குறிக்கிறது.
ஆரம்பத்தில் உயிரியல் பூங்கா உடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெளிநாட்டிலிருந்து ஒரு வயது வந்த ஆப்பிரிக்க யானையைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை கடினமான முன்மொழிவு என்று விவரித்தார். மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது இந்த இனம் மிகவும் வித்தியாசமானது மற்றும் சிக்கலானது. அவற்றின் தேவைகளின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
“ஆப்பிரிக்க யானைகள் பெரிய விலங்குகள், காடுகளில் நீண்ட தூரம் நடப்பதாக அறியப்படுகிறது. யானைகள் பொதுவாக சிறை வைக்கப்படும் இனங்கள் அல்ல. அவற்றை கொண்டு செல்வது சவாலாக இருக்கும். விலங்குகளுக்கான இடத்தை உறுதி செய்தல், அவற்றை நடைமுறைகளில் ஈடுபடுத்துதல், உணவளித்தல் மற்றும் செறிவூட்டலை உறுதி செய்தல் போன்றவை ஒரு வயது வந்த விலங்குக்கு கூட சவால்கள் உள்ளன. அவர்களின் பராமரிப்பின் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு ஒரு பெரிய பரப்பளவு மற்றும் மனிதவளம் தேவை,” என்று அந்த அதிகாரி கூறினார். மேலும், “இது சாத்தியம், ஆனால், சவாலானது. சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும், பின்னர் தனிநபர்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.” என்று கூறினார்.
உயர் தரமும் சுகாதாரமும்
சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் தனித்துவமான நிலை 2013 CZA வழிகாட்டுதல்களால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது மீட்கப்பட்ட யானைகள் அல்லது பறிமுதல் செய்யப்பட்ட யானைகளைத் தவிர, யானைகளை மேலும் சேர்த்துக் கொள்வதைத் தடை செய்கிறது. CZA, சில உயிரியல் பூங்காக்களில் யானைகளை வைக்க அனுமதிக்கலாம் என்று கூறியது. உயிரியல் பூங்காவின் வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதற்கும், பரப்பளவு அதிகரிப்பதற்கும், "உயர்ந்த தரமான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும் உட்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் உயிரியல் பூங்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஆப்பிரிக்க யானை, உயிரியல் பூங்காவுக்கு வருகை தரும் “சிறு குழந்தைகளுக்குக் கற்கும் ஒரு முக்கியமான கல்விக் கருவி” என்றும், இந்த யானையை மஸ்த் காலத்தில் (மத நீர் வடியும் காலம்) மட்டுமே அதன் அடைப்பில் சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்திய உயிரியல் பூங்காக்கள் உலகில் யானைகள் தனியாக இருக்கும் சவாலை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் ஆசிய யானையான ஹேப்பி அடைத்து வைக்கப்பட்டதை ஒரு வழக்கறிஞர் குழு முன்பு எதிர்த்தது. இது உயிரியல் பூங்காவில் உள்ள மற்ற ஒரே ஆசிய யானையான பாட்டியிலிருந்து தனியாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நியூயார்க் மாநில மேல்முறையீட்டு நீதிமன்றம் யானை ஒரு நபர் அல்ல என்றும், எனவே மனித உரிமை சுதந்திரத்திற்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது. ஜப்பானில் உள்ள தனியான யானைகள் பற்றிய 2017-ம் ஆண்டு அறிக்கையில், ஒரு பாதுகாப்பு உயிரியலாளர் கீத் லிண்ட்சே, “யானைகள் வாழ்க்கையின் தனிமை இயல்பு சந்தேகத்திற்கு இடமின்றி அவற்றின் உளவியல் துயரத்தையும், இதனால், ஒரே மாதிரியான தொடர்ச்சியான நடத்தையையும் கொண்டது” என்று குறிப்பிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.