scorecardresearch

இண்டிகோ விமானத்தில் தீ விபத்து; பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்; விமான போக்குவரத்து துறை விசாரணை

டெல்லியில் இண்டிகோ விமானத்தில் தீ விபத்து; பத்திரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்; தீவிர விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

இண்டிகோ விமானத்தில் தீ விபத்து; பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்; விமான போக்குவரத்து துறை விசாரணை

விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் ஓடுபாதையில் தீப்பொறிகள் காணப்பட்டதை அடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) மற்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டதாகவும், புறப்படுவதற்கு முன்பே தரையிறக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: ஆசம் கான் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு.. ராம்பூர் சதார் தொகுதி காலி.. அடுத்து என்ன?

போலீஸ் துணை கமிஷனர் (விமான நிலையம்) தனு ஷர்மா கூறியதாவது: டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E2131 விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று 22.08 மணிக்கு CISF கட்டுப்பாட்டு அறையிலிருந்து அழைப்பு வந்தது. விமானத்தில் 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் புறப்பட்டது. விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்,” என்று கூறினார். இறுதியில் பயணிகள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சம்பவத்தின் விரிவான விசாரணையை மேற்கொள்வதும், இயந்திரத்தில் தீ ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிவதும் முன்னுரிமை. அதிர்ஷ்டவசமாக, தீ வேகமாக அணைக்கப்பட்டது, இப்போது விமானம் கட்டுப்பாட்டில் உள்ளது, ”என்று டி.ஜி.சி.ஏ தலைவர் அருண் குமார் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.,யிடம் தெரிவித்தார். மேலும், “இந்த எஞ்சின்கள் தொடர்பாக இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை சரிபார்க்க டி.ஜி.சி.ஏ விரிவான ஆய்வை மேற்கொள்ளும். விசாரணைக்கு பின், உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

விமானத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை ட்வீட் செய்த பயணிகளில் ஒருவருக்கு பதிலளித்த இண்டிகோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மேடம், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். விமானம் புறப்படும் போது என்ஜின் ஸ்டால் ஏற்பட்டது. புறப்படுதல் நிறுத்தப்பட்டு, விமானம் பத்திரமாக நிலையத்திற்கு திரும்பியது. அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உடனடி உதவிக்கு, விமான நிலையத்தில் உள்ள எங்கள் குழு உறுப்பினர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்,” என்று பதிவிட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டது: “டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமானம் 6E2131, டேக் ஆஃப் ரோலில் இருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது, உடனடியாக விமானி புறப்படுவதை நிறுத்திவிட்டு விமானம் நிலையத்திற்குத் திரும்பியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் விமானத்தை இயக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

டாக்ஸியில் செல்லும் போது வரிசையில் இண்டிகோ விமானத்தின் பின்னால் இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் பைலட், என்ஜினில் ஏற்பட்ட தீ பற்றி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு எச்சரித்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமானம் 6E2131, டேக்-ஆஃப் ரோலில் இருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், உடனடியாக விமானி புறப்படுவதை நிறுத்தியதாகவும், விமானம் பாதுகாப்பாக நிலையத்திற்கு திரும்பியதாகவும் இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் விமானத்தை இயக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது, இது அக்டோபர் 29, 2022 அன்று 0016 மணி நேரத்தில் புறப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Indigo flight bangalore delhi fire grounded

Best of Express