வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் செவ்வாய்க்கிழமை (பிப்.21) தனது ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் அவரது தந்தையும் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலருமான கே. சுப்பிரமணியத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “பாதுகாப்புத் துறை செயலர் பொறுப்பில் இருந்து எனது தந்தை கே. சுப்பிரமணியத்தை இந்திரா காந்தி நீக்கினார். 1980களில் ராஜிவ் காந்தி, அவரை விட இளையவர் ஒருவரை கேபினெட் செயலாளர் ஆக்கினார்.
சிறு வயதில் இருந்தே மத்திய செயலாளர் ஆவதே எனது லட்சியமாக இருந்தது என்றார். இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முதலில் தாம் வெளியுறவு செயலர் பதவிக்கு வர வேண்டும்” என்று விரும்பினேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் “ஒரு அதிகாரியாக இருந்த என் தந்தை ஒரு செயலாளராக ஆனார் என்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருந்தோம்.
ஆனால் அவர் தனது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் 1979 இல் ஜனதா அரசாங்கத்தின் இளைய செயலாளராக ஆனார்.
ஒருவேளை அவரின் நேர்மை அவருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம், எனக்குத் தெரியாது. அதன் பிறகு, அவர் மீண்டும் ஒரு செயலாளராக ஆகவில்லை. ராஜீவ் காந்தி காலத்தில் அவரை விட இளைய ஒருவரால் கேபினட் செயலாளராக பதவியேற்றார்.
என் மூத்த சகோதரர் செயலாளராக ஆனபோது அவர் மிகவும் பெருமைப்பட்டார். ஆனால் நான் அவரின் மறைவுக்கு பின்னர்தான் செயலாளர் ஆனேன்.
எங்களைப் பொறுத்தவரை, அந்த நேரத்தில் செயலாளர் ஆவதுதான் குறிக்கோளாக இருந்தது. நான் சொன்னது போல் அந்த இலக்கை அடைந்துவிட்டேன்.
தொடர்ந்து எனக்கான அரசியல் வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. சுருக்கமாக பார்த்தேன். மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்தபோது நான் மிகவும் உறுதியாக இருந்தேன்.
தற்போது, “எனது கட்சியிலும் பிற கட்சிகளிலும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மிகவும் கவனமாகப் பார்க்கிறேன்” என்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார். அதை நினைவுக் கூர்ந்த ஜெய்சங்கர், “இந்தக் கோடைக் காலம் வந்தால் 4 ஆண்டுகள். அற்புதமான நாள்கள். பல மனிதர்களை சந்தித்துள்ளேன்” என்றார்.
தொடர்ந்து எல்லைப் பகுதியில் இந்திய சீன மோதல் குறித்து பேசிய ஜெய்சங்கர், “இந்திய நாட்டை காக்க எல்லைக்கு படையை அனுப்பியது ராகுல் காந்தி அல்ல நரேந்திர மோடி. 1962இல் என்ன நடந்தது என்பதை எதிர்க்கட்சிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்றார்.
மேலும் எல்லையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் சீன விவகாரம் குறித்து அவர் கூறுகையில், “இந்த சீனா விஷயத்தை நான் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், எங்காவது அரசாங்கம் தற்காப்புடன் இருக்கிறது.
. பெரும் முயற்சியுடன் பெரும் செலவில் படையினரை அங்கு தங்க வைத்துள்ளோம். இந்த அரசில் எல்லையில் உள்கட்டமைப்பு செலவினங்களை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம்.
இப்போது சொல்லுங்கள் யார் சொல்வது உண்மை” எனவும் அவர் பதில் கேள்வியெழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/