இந்திரா காந்தியின் 34வது நினைவு தினம் இன்று… தலைவர்கள் அஞ்சலி

இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் சோனியா காந்தி

By: October 31, 2018, 4:04:04 PM

இந்திரா காந்தி 34வது நினைவு தினம் : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. இதனையொட்டி நாடு முழுவதும் இந்திரா காந்தி அம்மையாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திரா காந்தி 34வது நினைவு தினம் நினைவிடத்தில் மலரஞ்சலி

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி

1984ம் ஆண்டு, தன்னுடைய பாதுகாப்பு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. இவரின் மறைவானது உலக அரங்கில் பெரிய அதிர்வினையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்தியாவின் இரும்பு மனுஷி என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர் இந்திய்ரா காந்தி.  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் இந்திரா காந்திக்கு அஞ்சலி கூறி ட்வீட் ஒன்றை செய்திருக்கிறார்.

மேலும் படிக்க : இந்திரா காந்தியின் சில அரிய புகைப்படங்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Indira gandhis 34th death anniversary

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X