Advertisment

இந்திய - அமெரிக்க பேச்சு வார்த்தை : பாகிஸ்தான் குறித்து தீவிர ஆலோசனை

வர்த்தக தொடர்புகள், பல்-மாதிரி இணைப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் ஆப்கானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவி ஆகியவற்றை பாராட்டினார்கள்.

author-image
WebDesk
New Update
Indo US 22 meeting Act immediately on terror Pakistan told

 Shubhajit Roy 

Advertisment

இந்தியா அமெரிக்க பேச்சுவார்த்தை முடிவுற்ற பின்னர், இருநாட்டு தலைவர்களும், பாகிஸ்தான் தன் எல்லையில் தீவிரவாத சக்திகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மேலும் 26/11 மும்பை தாக்குதல், உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட நபர்களை உடனே நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். டிசம்பர் 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உரி குறித்து பேசவில்லை.

இறையாண்மை, அமைதி, ஐக்கியம், ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பான ஆஃப்கானை உருவாக்குவது குறித்து இருதரப்பு ஆர்வம் குறித்தும் அந்த கூட்டத்தில் பேசப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், மைக் பாம்பியோவிற்கு ஆப்கான் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு என்ன என்பதை எடுத்துரைத்தார். மேலும் அந்நாட்டின் எதிர்காலம் ஆப்கானியர்களால், எந்த ஒரு பலத்தையும் உபயோகிக்காமல் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.  ஆப்கானில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பிராந்திய இணைப்புகளை விரிவுபடுத்த உருவாக்கப்படும் வர்த்தக தொடர்புகள், பல்-மாதிரி இணைப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் ஆப்கானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவி ஆகியவற்றை பாராட்டினார்கள்.

சீனாவின் ஹூவேய் மற்றும் ZTE நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் எப்போதுமே அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. செவ்வாய் கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 5ஜி தொழில்நுட்பம் குறித்து பேசும் போது, அமைச்சர்கள் திறந்த, நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான இணைய சேவைக்கு உறுதி கொடுத்துள்ளோம் என்று கூறினார்கள் அமைச்சர்கள். உள்கட்டமைப்பு மற்றும் ஸ்ட்ராடெஜிக் மெட்டீரியல் ஆகியவற்றின் திறந்த, பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய விநியோகத்திற்காக தொழிற்துறை மற்றும் கல்வித்துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்க்க வலியுறுத்தினார்கள். 5 ஜி நெட்வொர்க்குகள் உட்பட வளர்ந்து வரும் ஐ.சி.டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு தொடர்புடைய ஆபத்தை சுயமாக மதிப்பீடு செய்ய வேண்டும் ” என்றும் கூறப்பட்டது.

to read this article in English

கொவ்வடாவில் 6 அணு உலைகளை கட்ட, நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிட்டட் மற்றும் வாஷிங்டன் எலெக்ட்ரிக் கம்பெனிக்கு இடையேயான பொறுப்பு கொள்கைகள் பகிர்வு குறித்தும் இதனால் உருவாக இருக்கும் தொழில்நுட்ப-வணிக வளர்ச்சி குறித்தும் பேசிய அவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக சிக்கித்தவிக்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய - அமெரிக்க சிவில் அணு ஒப்பந்தம் குறித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின் போது இந்தியா-அமெரிக்க கவுண்டர் நார்கோடிக்ஸ் க்ரூப், இந்த ஆண்டின் இறுதியில் மெய்நிகர் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டனர். 2021ம் ஆண்டு நேரில் சந்திப்பு நடைபெறும். கோவிட்19 போன்ற தொற்றுநோய்கள், மற்றும் வளர்ந்து வரும் அச்சங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் மூலமாக கூட்டு முயற்சி மேற்கொள்ள இது திட்டமிடப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், அமைச்சர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் குழுவின் அமைவிடம் மற்ரும் அவர்களுக்கான தடைகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படும். குறிப்பாக, சமீபத்திய சட்ட மாற்றங்களின் வெளிச்சத்தின் மூலம், பயங்கரவாத குழுக்களுக்கு அளிக்கப்படும் நிதி மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக நடந்து கொள்வது குறித்து பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறினார்கள். பயங்கரவாத பிரதிநிதிகளின் பயன்பாட்டை அவர்கள் கண்டித்தனர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கடுமையாக கண்டனம் செய்தனர். அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் / டேஷ், லஷ்கர்-இ-தயிபா, ஜெய்ஷ்-இ-முகமது, மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இது 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை போன்றே இருந்தது. மாறாக தாவூத் இப்ராஹீம் மற்றும் டெஹ்ரிக் - இ -தாலிபான் ஆகிய குழுக்களின் பெயர்கள் இந்த முறை குறிப்பிடப்படவில்லை. அமைச்சர்கள் ஐ.நா உட்பட பலதரப்பு அரங்குகளில் தங்களது ஒத்துழைப்பை மேம்படுத்த உத்தேசித்துள்ளனர்.

கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இருதரப்பு இந்தியா-அமெரிக்க வர்த்தகத்தை "புத்துயிர் பெறுவதற்கும் விரிவாக்குவதற்கும்" முயற்சிகளை முடுக்கிவிட அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது சம்பந்தமாக, சந்தை அணுகலை மேம்படுத்துதல், வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்துதல் பற்றிய புரிதலை எட்டுவதற்காக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி மற்றும் இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். சட்டமன்றங்களுக்கிடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர்கள், இந்தியா-அமெரிக்க நாடாளுமன்ற பரிமாற்றத்தை தொடங்க ஒப்புக் கொண்டனர். வளர்ந்து வரும் நட்புக்கு முதல்படியாக 12 மாத பரஸ்பர தற்காலிக விசாக்களை வழங்க இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India United States Of America Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment