Advertisment

அசைவ உணவை அதிகம் விரும்பிய சிந்து சமவெளி மக்கள் ; வெளியானது ஆய்வு கட்டுரை

அந்த மக்கள் அசைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டும் அல்லாமல் அவர்கள் பன்றி மற்றும் மாட்டிறைச்சியையும் உட்கொண்டவர்கள் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது

author-image
WebDesk
New Update
அசைவ உணவை  அதிகம் விரும்பிய சிந்து சமவெளி மக்கள் ; வெளியானது ஆய்வு கட்டுரை

 Esha Roy

Advertisment

Indus Valley civilisation diet had dominance of meat, finds study : புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட தொல்லியல் அறிவியல் இதழில் சிந்து சமவெளி மக்களின் உணவுப் பழக்கம் தொடர்பாக ஆராய்ச்சி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் அம்மக்களின் உணவில் மாட்டிறைச்சி உட்பட அசைவ உணவுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

 

publive-image

Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற தலைப்பில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்கும் அக்‌ஷ்யேதா சூரிய நாராயணன், தன் ஆராய்ச்சியின் ஒரு பங்காக இந்த ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வு அந்த காலத்து மக்களின் உணவு பழக்க வழகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஹரியானாவில் உள்ளா ஹரப்பா அகழ்வாய்வு பகுதியில் இருந்து பெறப்பட்ட புரத எச்சங்கள் மீது இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டது.

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் (இன்றைய உ.பி. மற்றும் ஹரியானா பகுதிகளில்) பன்றிகள், கால்நடைகள், எருமைகள், ஆடுகள் மற்றும் செம்மறி உணவுகளும், பால் பொருட்களையும் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீங்கான் பாத்திரத்தில் பயன்படுத்தியதை அவர்கள் கண்டறிந்ந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

புனேவின் டெக்கான் கல்லூரியில் துணை வேந்தராக பணியாற்றும், புகழ்பெற்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர் வசந்த் ஷிண்டே மற்றும் பேராசியர் ரவீந்திர என்.சிங், மிரியம் க்யூபஸ், ஓலிவர் இ. க்ரைக், கார்ல் பி. ஹெரான், டஸ்மின் சி. ஒ. கான்னெல், காமெரோம் ஏ. பெட்ரி ஆகியோர் இந்த கட்டுரையை எழுதியுள்ளனர்.

அக்‌ஷ்யேதா, “இதற்கு முன்பும் அம்மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்றது. ஆனால் அவையாவும் அந்த காலத்தில் இருந்த பயிர்கள் அடிப்படையில் ஆராயப்பட்டது: என்று கூறினார். இவரின் ஆராய்ச்சி இந்து சமவெளியில் என்ன சமைக்கப்பட்டது என்பதை அடிப்படையாக கொண்டது. லிபிட் ரெசிட்யூ அனலஸிஸ் மூலமாக அவர்களின் உணவு பழக்கத்தை ஆய்வு செய்து வருகிறார்.

வீட்டு விலங்களில் கால்நடைகளும் எருமைகளும் அதிக அளவில் இருந்துள்ளன. 50% முதல் 60% அளவில் கண்டெக்கப்பட்ட எலும்புகளில் இவைகள் தான் இருந்துள்ளது. 10% எலும்புகள் மட்டுமே ஆடுகளுக்கு உரியவையாய் உள்ளன. அதிக அளவில் மாடுகளின் எலும்புகள் இருப்பது அவர்களின் மாட்டிறைச்சி கலாச்சார விருப்பத்தை காட்டலாம். இதற்கு அடுத்த படியாக ஆட்டிறைச்சியை அதிகம் உட்கொண்டுள்ளனர். ஹரப்பாவில் 3 அல்லது மூன்றரை ஆண்டுகள் வரையில் கால்நடைகள் உயிருடன் வளர்க்கப்பட்டுள்ளது. பால் பொருட்கள் உற்பத்திக்காக பெண்கள் பயன்படுத்தி வந்தனர். அதே நேரத்தில் ஆண்கள் விவசாயத்தில் நிலத்தை உழ பயன்படுத்தியுள்ளனர்.

மான், முயல், பறவைகள், நதிக்கரை விலங்குகள், கடற்கரை விலங்குகல் போன்றவையும் சிறிய அளவில் நகர்புற சிந்து சமவெளிப் பகுதிகளில் கண்டறியப்பட்டன. இந்த மாறுபட்ட வளங்கள் சிந்து உணவில் இடம் பெற்றுள்ளன என்று கூறுகின்றன. இது வடமேற்கு இந்தியாவில் இருக்கும் மற்ற அகழ்வாய்வு பகுதிகளில் கண்டறியப்பட்ட உணவு பழக்கவழக்கங்களை ஒத்திருக்கிறது. இந்த ஆய்வு தனித்துவமானது. இது அங்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை பகுப்பாய்வு செய்து பெறப்பட்டதாகும். பொதுவாக விதைகள் மற்றும் தாவர எச்சங்களையே ஆய்வு செய்வார்கள். இந்த அனலிஸ் மூலம் மாட்டிறைச்சி, ஆடு, செம்மறி ஆடு மற்றும் பன்றி நுகர்வு பரவலாக இருந்தது, குறிப்பாக மாட்டிறைச்சி என்று நாம் நம்பிக்கையுடன் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் அவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய முனைவர் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு தற்போது பிரான்ஸ் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார்.

கோழி இறைச்சி அவர்கள் உணவில் ஒரு பகுதியாக இருந்த போதிலும் பறவைகள் மற்றும் முயல்களையும் அவர்கள் உட்கொண்டனர் என்பதை இந்த ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது. "ஹரப்பாவில் லெட்ஜ்-ஷோல்டர்ட் குவளைகளும் பெரிய சேமிப்பு பானைகளும் மது மற்றும் எண்ணெய் போன்ற திரவங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரீக மக்களின் உணவைப் பற்றி தெரிந்து கொள்ள இரண்டு ஆராய்ச்சிகளை நாம் முக்கியாக காண வேண்டும். அருணிமா கெய்ஷப் 2011-12 ஆண்டில் வெளியிட்ட கட்டுரை முதலாவது. அவர் தான், அம்மக்களின் உணவுகளில் மசாலா பொருட்கள் இருப்பதை உறுதி செய்தார். கத்திரிக்காய், மஞ்சள், பூண்டு, இஞ்சி ஆகியவற்றின் பயன்பாட்டையும் அவர் தான் முதல் முதலில் கண்டறிந்து கூறினார். இரண்டாவதாக கல்யாண் சேகர் சக்கரவர்த்தி கூறியது. குஜராத்தில் உள்ள தளங்களில் இருந்து லிப்பிட் எச்சம் விசாரணை, ஆடு, செம்மறி ஆடு மற்றும் சீஸ் மற்றும் பன்னீர் போன்ற டைரி பொருட்களை தயாரித்தல், தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்துதல் குறித்து அவர் கூறியிருந்தார்.

அக்‌ஷ்யேதாவின் ஆராய்ச்சி உணவு பழக்க வழக்கங்கள் தொடர்பான ஆய்வை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது. அந்த மக்கள் அசைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டும் அல்லாமல் அவர்கள் பன்றி மற்றும் மாட்டிறைச்சியையும் உட்கொண்டவர்கள் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. “விலங்குகளின் எலும்புகள் மற்றும் எச்சங்கள் ஏராளமாக இருப்பதால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும், இது இயற்கை காரணங்களால் மட்டும் இருக்க முடியாது. ஆனால் லிப்பிட் எச்சம் பகுப்பாய்வு அதற்கு கடினமான அறிவியல் சான்றுகள்” என ஷிண்டே கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment