நிறுத்திவைக்கப்பட்ட சிந்து ஒப்பந்தம்! சாலால், பக்லிஹார் அணைகள் இனி மாதாமாதம் தூர்வார அரசு திட்டம்

ஆதாரங்களின்படி, மே மாத தொடக்கத்தில் தொடங்கிய இந்த வண்டல் வெளியேற்றத்தின் மூலம் 690 மெகாவாட் சலால் மற்றும் 900 மெகாவாட் பக்லிஹார் நீர்த்தேக்கங்களில் இருந்து 7.5 மில்லியன் கன மீட்டர் வண்டல் அகற்றப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, மே மாத தொடக்கத்தில் தொடங்கிய இந்த வண்டல் வெளியேற்றத்தின் மூலம் 690 மெகாவாட் சலால் மற்றும் 900 மெகாவாட் பக்லிஹார் நீர்த்தேக்கங்களில் இருந்து 7.5 மில்லியன் கன மீட்டர் வண்டல் அகற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Indus Waters Treaty

சிந்து நதி நீர் உடன்படிக்கை (IWT) தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் மற்றும் சலால் நீர்மின் நிலையங்களில் ஏற்கனவே முதல் கட்ட வண்டல் வெளியேற்றப் பணியை அரசாங்கம் மேற்கொண்டது. தற்போது, இந்த வண்டல் வெளியேற்றத்தை மாதந்திர வழக்கமாக மேற்கொள்ள மத்திய நீர் ஆணையம் (CWC) பரிந்துரைத்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியன் எக்ஸ்பிரஸ் மே 4-ம் தேதி முதன்முதலில் செய்தி வெளியிட்டது போல, மின் உற்பத்தியைப் பாதிக்கும் வண்டலை அகற்ற சலால் மற்றும் பக்லிஹார் நீர்த்தேக்கங்களில் தேசிய நீர்மின்சக்தி நிறுவனம் (NHPC) மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வண்டல் வெளியேற்றும் பணியைத் தொடங்கியுள்ளன. 1987-ல் கட்டப்பட்ட சலால் மற்றும் 2008-09ல் கட்டப்பட்ட பக்லிஹார் அணைகளில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான எதிர்ப்புகளால் இந்த பணிகள் முன்னர் தடுக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் முதல் முறையாக இப்படியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, மே மாத தொடக்கத்தில் தொடங்கிய இந்த வண்டல் வெளியேற்றத்தின் மூலம் 690 மெகாவாட் சலால் மற்றும் 900 மெகாவாட் பக்லிஹார் நீர்த்தேக்கங்களில் இருந்து 7.5 மில்லியன் கன மீட்டர் வண்டல் அகற்றப்பட்டுள்ளது.

"இரு திட்டங்களுக்கும் மாதந்தோறும் கட்டாய வண்டல் வெளியேற்றம் மேற்கொள்ள CWC தற்போது பரிந்துரைத்துள்ளது. இதற்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) விரைவில் வெளியிடப்படும்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

வண்டல் வெளியேற்றம் என்றால் என்ன?

வண்டல் வெளியேற்றம் என்பது நீர்த்தேக்கங்களில் காலப்போக்கில் படிந்துள்ள மணல், களிமண் போன்ற வண்டல் படிவுகளை அகற்ற சேமிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதாகும். வண்டல் படிவுகள் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவைக் குறைத்து நீர்மின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. இந்தத் துகள்களைத் தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம், இயக்குபவர்கள் சேமிப்பு இடத்தைப் மீட்டெடுத்து விசையாழியின் செயல்திறனை மேம்படுத்துகிறார்கள். இது நம்பகமான மின் உற்பத்தியை உறுதி செய்வதுடன் நீர்மின் நிலையங்களின் ஆயுளையும் நீடிக்கிறது.

இருப்பினும், வண்டலை அகற்ற சேமிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவது தற்காலிகமாக கீழ்நோக்கி நீரின் போக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், மதகுகளை மூடி நீர்த்தேக்கத்தை நிரப்புவது பின்னர் வெளியிடுவதற்கான நீரின் அளவைக் குறைக்கலாம் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் உடன்படிக்கை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், சிந்து நதி நீரைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் குறுகிய காலத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதந்திர வண்டல் வெளியேற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் குறுகிய கால நடவடிக்கையாக, இந்தியா பாகிஸ்தானுடன் நீர்நிலைத் தரவுகளைப் பகிரவோ அல்லது இந்த வண்டல் வெளியேற்ற நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவோ மாட்டாது. நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில், பாகிஸ்தானின் எதிர்ப்புகளால் முடக்கப்பட்ட நீர்மின் திட்டங்களை விரைவுபடுத்துவது, சிந்து நதியின் சில நீரோட்டங்களை திசை திருப்புவது மற்றும் புதிய திட்டங்களை ஆராய்வது போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"உடன்படிக்கையின் கீழ் எந்தவொரு புதிய திட்டத்திற்கும், இந்தியா ஆறு மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு அப்படி எந்த கடமையும் இல்லை" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். அரசாங்கம் விரைவுபடுத்தவுள்ள நீர்மின் திட்டங்களில் செனாப் நதியில் அமைந்துள்ள பக்கல் துல் (1,000 மெகாவாட்), கிர்ரு (624 மெகாவாட்), குவார் (540 மெகாவாட்) மற்றும் ராட்லே (850 மெகாவாட்) ஆகியவை அடங்கும்.

சிந்து நதி நீர் உடன்படிக்கை 1960 செப்டம்பர் 19 அன்று ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தானது. இதில் 12 கட்டுரைகள் மற்றும் எட்டு பின்னிணைப்புகள் (A முதல் H வரை) உள்ளன. இதன் விதிகளின்படி, "கிழக்கு நதிகளான" சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகியவற்றின் அனைத்து நீரும் இந்தியாவின் "வரம்பற்ற பயன்பாட்டிற்கு" கிடைக்கும்; "மேற்கு நதிகளான" சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தான் பெறும்.

"பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நம்பத்தகுந்ததாகவும் மீளமுடியாத வகையிலும் கைவிடும் வரை" இந்தியா இந்த உடன்படிக்கையை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து ஏப்ரல் 24 தேதியிட்ட கடிதம் மூலம் பாகிஸ்தானுக்கு முறைப்படி அறிவித்தது; இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், டெல்லியின் கவலைகளை விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் மே மாதத்தில் இதற்கான தேதியை பரிந்துரைப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 2023 மற்றும் செப்டம்பர் 2024 ஆகிய தேதிகளில் உடன்படிக்கையை "மதிாய்வு செய்து மாற்றியமைக்க" கோரி இரண்டு முறை அறிவிப்பு அனுப்பப்பட்ட போதிலும், பாகிஸ்தான் இதற்கு முன்பு வெளிப்படையாக விருப்பம் தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா உடனடியாக உடன்படிக்கையை நிறுத்தி வைத்த பின்னரே பாகிஸ்தான் தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது.

Read in English: Indus pact on hold, Govt plans monthly flushing of Salal and Baglihar dams

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: