மே 10-க்குப் பிறகு மின்சார தேவை அதிகரித்தபோதுதான், பொது முடக்கநிலையில் இருந்து இந்தியா படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கான குறியீடுகள் தென்பட்டன. ஒன்பது வாரங்களுக்கு முன்னர் திடீரென சரிந்த மின்தேவை, தற்போதுதான் கடந்த ஆண்டு தேவை அளவை தொட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவை, கடந்த ஆண்டு அதே நாளில் பதிவு செய்யப்பட்ட மின் தேவை அளவைத் தாண்டியது.
கடந்த மே 26 அன்று பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தில் அளவு, கடந்த ஆண்டு இதே நாளில் பதிவு செய்யப்பட்ட மின்சார பயன்பாட்டுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போவதாக பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் தொகுத்த சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் வெப்பஅலை தீவிரமடைந்ததால், வீடுகளின் பயன்பாட்டுக்கான மின் சுமைகள் அதிகரிக்க காரணமாய் அமைந்தது. இருப்பினும், தொழில்துறைகள் மீண்டும் படிப்படியாக தொடங்கப்படுவதாலும், ரயில் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாலும், மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
தொழில்துறை நடவடிக்கைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பொது முடக்கநிலையில் இருந்து தளர்வு அறிவித்தது. இதன்மூலம், முக்கியமாக பெரிய நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினர்.இது, சிறு விற்பனையாளர் மட்டங்களில் தொழில் ரீதியான நடவடிக்கைகளை வேகமெக்க உதவின. இதன்மூலம், ஒட்டுமொத்த தொழில்துறையின் மின்சாரத் தேவைகள் மெதுவாக அதிகரித்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார ஆற்றல் பரிமாற்றமான இந்திய எரிசக்தி பரிவர்த்தனை நிறுவனத்தில், தொழில்துறை நிறுவனங்களுக்கு மின்சாரத் தேவை அதிகரித்தற்கான சான்றுகள் பிரதிபலித்தன. உதாரணமாக, நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச அளவான 211 மில்லியன் யூனிட்டுகளை (எம்.யு) கடந்த மே 25 அன்று தான் அந்த நிறுவனம் பதிவு செய்தது.
பொது முடக்கநிலை தளர்வுக்கு பின் முக்கிய உற்பத்தித் துறைகளின் பொருளாதார செயல்பாடுகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றது. மே 26 ஆம் தேதி இந்தியாவில் 3,775 ஜிகாவாட் மணி (ஜி.டபிள்யூ.எச்) மின்சாரம் பயன்படுத்தப்பட்டது . இது, முந்தைய ஆண்டின் அதே நாள் அளவை விட (3,850 ஜிகாவாட் மணி) சற்று தான் குறைவாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, மின்சாரத் தேவையின் அளவு 5 சதவிதமாக அதிகரித்து இருந்ததாலும், மார்ச் மாத இறுதியில் பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டதாலும், தற்போது மின்சார பயன்பாடு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதைத் தாண்டினால் தான் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அர்த்தம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
முதலாவது பொது முடக்கநிலையின் இறுதி நாட்களில் இருந்து (ஏப்ரல் 27-ல் இருந்து), அனைத்து ஐந்து பிராந்தியங்களிலும் மின்சார தேவை நிலையாக அதிகரித்துள்ளது. மே 4-12 முதல், மின்சார பயன்பாடு மெதுவாக அதிகரித்தாலும், வானிலை தாக்கங்கள் காரணமாக பயன்பாடுகளில் ஏற்றமிறக்கம் உணரப்பட்டது என்று தரவுகளை ஒருங்கிணைக்கும் மத்திய மின்சார ஆணையத்துடன் (சிஇஏ) சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"கடந்த ஆண்டு மின்சார தேவை அளவை நாம் இன்னும் தொடவில்லை. பொதுவாக, ஒரு ஆண்டின் மின்சார தேவை கடந்த ஆண்டு அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 5-6% அதிகமாக இருக்க வேண்டும். மே 10 முதல், ஐந்து பிராந்தியங்களிலும் மின்சார தேவைகள் மிகவும் தீர்க்கமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஊரடங்கு தாக்கம் குறித்து கண்டறிய நாங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டுக்கான மின் சுமை சாதாரண காலங்களில் மொத்த மின் சுமைகளில் 30-32 சதவீதமாக உள்ளது. ஆனால்,பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து, வீடுகளின் பயன்பாட்டுக்கான மின் சுமையே மொத்த மின்சுமையாக இருந்தது.
இந்தியாவின் மொத்த மின்சார தேவையின் மின்சுமையில் தொழில்துறை நுகர்வு மின்சுமை 40%, விவசாயத்திற்கான மின் நுகர்வு மின்சுமை 20% ஆகும். அதே நேரத்தில் வணிக மின்சாரம் நுகர்வு தேவை 8% ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.