scorecardresearch

தேசவிரோத சக்திகளுடன் இன்போசிஸ் கூட்டணி: ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழ் பகிரங்க புகார்

இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கிய புதிய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள குறைபாடுகளின் பின்னணியில் இந்த ‘பாஞ்சஜன்யா’ வார இதழ் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தேசவிரோத சக்திகளுடன் இன்போசிஸ் கூட்டணி: ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழ் பகிரங்க புகார்

ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த ‘பாஞ்சஜன்யா’ வார இதழின் சமீபத்திய பதிப்பில், முதல்முறையாக ஒரு முன்னணி நிறுவனத்தை தேச விரோத சக்திகளுடன் இணைந்துள்ளதாக முத்திரை குத்த ஆர்.எஸ்.ஏஸ் முயற்சி செய்துள்ளது. மேலும், அது பெங்களூருவைச் சேர்ந்த பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்திருக்கலாம், மேலும் அது நக்சல்கள், இடதுசாரிகள் மற்றும் சின்ன சின்ன கும்பலுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது.

இப்போது வரை, இத்தகைய அவதூறு தனிநபர்கள், செயற்பாட்டாளர்கள், வளாகங்களில் உள்ள சில பிரிவுகள் மற்றும் அரசியல் எதிர்ப்பில் உள்ள சிலரை குறிவைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது. தகவல்தொழில்நுட்ப (ஐடி) சேவைகளில் முதல் தலைமுறை சீர்திருத்தங்களைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் முக்கிய ப்ளூ-சிப் முறையில் உள்நாட்டு முன்னோடிகளில் ஒன்றாக மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் பார்க்கப்படுகிறது.

இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள குறைபாடுகளின் பின்னணியில் இந்த வார இதழ் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த இணையதளம் ஜூன் 7ம் தேதி ஆன்லைனுக்கு போனது. ஆனால், வரி செலுத்துவோருக்கு தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக்கை அழைத்து, இந்த குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனத்திற்கு செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம் அளித்தார். இன்போசிஸ் 2019ல் இந்த ஒப்பந்தத்தை பெற்றது.

“இன்போசிஸ் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற மோசமான ஒரு சேவையை வழங்குமா” என்று அந்த கட்டுரையில் கேட்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனியார்மயமாக்கல் மற்றும் பணமாக்குதல் இலக்குகள் மூலம் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை லட்சியமாக முன்வைத்தபோது இந்த கட்டுரை வருகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த பாஞ்சஜன்யா எடிட்டர் ஹித்தேஷ் சங்கர் கூறியதாவது: “கவர் ஸ்டோரி ஒரு பெரிய நிறுவனத்தைப் பற்றியது (இன்போசிஸ்) அதன் பணியின் தரம் அதன் நற்பெயருக்கு ஏற்றதாக இல்லை. இது நிறுவனத்தின் நற்பெயருக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது … இது போன்ற நடதையும் விநியோகமும் சமூகத்தில் அதிருப்தியை உருவாக்குகிறது. சமூக ரீதியாக கேள்விக்குரிய / பிரச்சார நிதியில் இன்போசிஸ் ஈடுபடவில்லை என்றால், அது வெளியே வந்து உண்மைகளை தெரிவிக்க வேண்டும்… சமூகத்தில் எழுந்துள்ள அதிருப்தியைப் பற்றி நாங்கள் எழுதுகிறோம். இது ஒரு மென்பொருள் நிறுவனமா அல்லது சமூக கோபத்தை உருவாக்கும் கருவியா என்பதை நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று கூறினார்.

ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் இது தொடர்பாக கருத்து கேட்க கிடைக்கவில்லை.

அந்த இதழின் கவர் ஸ்டோரியான “சாக் அவுர் ஆகாத்” (நற்பெயரும் தீங்கும்), பாஞ்சஜன்யா இன்போசிஸ் அரசாங்கத் திட்டத்தில் சிக்கியது இது முதல் முறை அல்ல என்று குற்றம் சாட்டியுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கான வலைத்தளங்களில் உள்ள சிக்கல்களை மேற்கோள் காட்டி, இந்த கட்டுரை கூறியிருப்பதாவது: “இவை மீண்டும் மீண்டும் நிகழும்போது, ​​அது சந்தேகத்தை எழுப்புகிறது. இன்போசிஸ் நிர்வாகம் வேண்டுமென்றே இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன… சில தேச விரோத சக்திகள் இன்போசிஸ் மூலம் இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அதே நேரத்தில், இந்த பத்திரிகை அதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்தின் வரலாறு மற்றும் சூழ்நிலைகள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அது உண்மைதான் என்பதாக நடந்துகொள்கிறது.

“நக்சல்கள், இடதுசாரிகள் மற்றும் சின்ன சின்ன கும்பலுக்கு உதவி செய்ததாக இன்போசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் இன்போசிஸ் விவகாரம் ஏற்கனவே வெளிப்படையாக வெளிவந்துள்ளது. தவறான தகவல் வலைத்தளங்களுக்கு … இன்போசிஸால் நிதியளிக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. சாதி வெறுப்பை பரப்பும் சில நிறுவனங்கள் இன்போசிஸ் தொண்டு நிறுவனங்களின் பயனாளிகளாகவும் உள்ளன. இன்ஃபோசிஸ் விளம்பரதாரர்கள் தேச விரோத மற்றும் அராஜக அமைப்புகளுக்கு நிறுவனம் நிதியளிப்பதற்கான காரணம் என்ன என்று கேட்கக்கூடாதா? இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நிறுவனங்கள் அரசாங்க-டெண்டர் செயல்முறையில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், “இன்போசிஸின் விளம்பரதாரர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சீட்டில் போட்டியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் தற்போதைய அரசாங்கத்தின் சித்தாந்தத்திற்கு எதிரான எதிர்ப்பு யாருக்கும் தெரியாதது இல்லை. இன்போசிஸ் முக்கியமான பதவிகளில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு சந்தா செலுத்தும் நபர்களை நியமிக்கிறது … அத்தகைய நிறுவனம் முக்கியமான அரசாங்க டெண்டர்களைப் பெற்றால், சீனா மற்றும் ஐஎஸ்ஐயின் செல்வாக்கு அச்சுறுத்தல் இருக்காதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களில் உள்ள கோளாறுகள் இந்திய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உறுதி செய்யும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியாக இருக்கலாம் என்று இந்தக் கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது. இது, ஆத்மநிர்பர் பாரதத்தின் கொள்கையை பாதிக்கும் என்று கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Infosys with anti national forces alleged rss linked journal alleged