பொதுவாக உயர் கல்வி மற்றும் பதவி உயர்விற்காக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதனை கட்டுரையாக வெளியிடுவது வழக்கம். அதிக அளவு நேரம், பொருள், மூளை ஆகியவற்றை செலவு செய்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டும் ஒரு கட்டுரையை சர்வதேச அளவில் பிரசுரிக்கலாம். அல்லது ஹைதராபாத் போன்ற பெரிய நகரில் இயங்கி வரும் நூற்றுக் கணக்கான கடைகள் அல்லது பிரசுரங்கள் ஒன்றில் பணத்தினைக் கொடுத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை விலைக்கு வாங்கியும் சமர்பிக்கலாம்.
இங்கு விலைக்கு வைக்கப்படும் கட்டுரைகளின் ஆராய்ச்சிகள் பெரும்பாலானவைகள் மருத்துவம், பொறியியல், மேலாண்மை, மதம் சார்ந்த கல்வி, புத்தம், வாழ்வியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டதே.
போலியான கட்டுரைகளை வெளியிடும் இந்த பிரசுரங்களை பிரிடேட்டரி ஜேர்னல்கள் (predatory journals) என்று அழைக்கின்றார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 300 பிரசுரங்கள் சர்வதேச கட்டுரையினை சமர்பிக்க உதவுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. இந்த பிரசுரங்களில் இருந்து பிரசுரமாகும் ஒரு கட்டுரையின் விலை சுமார் 30 அமெரிக்க டாலரில் தொடங்கி 1,800 டாலர்கள் வரை செல்கிறது.
உங்களால் நம்ப இயலாது. உலகின் மிகப்பெரிய பிரிடேட்டரி ஜேர்னல்கள் பிரசுரிக்கும் இந்திய நிறுவனம் ஒன்று, ஹைதராபாத்தில் இருக்கும் ரிச்சா பகுதியில் ஒரு அறையில் ஒரு மடிக்கணினியுடன் தான் இருக்கிறது.
இந்த பிரசுரங்களில் பெரும்பாலனவை இணைய தளத்தில், ஆயிரக்கணக்கான தொழில் துறை வல்லுநர்களைக் கொண்டு செயல்படுகிறது என்று சொல்லிக் கொண்டு இயங்குகிறது. இதனை நம்பும் மாணவர்கள் தங்களின் கட்டுரைகளை சமர்பிக்கின்றார்கள். ஆனால் அக்கட்டுரைகளின் மேற்பார்வை, திருத்தம், ஆகியவற்றை ஒரே ஒரு நபர் தான் செய்வார். செய்துவிட்டு டாலர் கணக்கில் பணம் பார்த்துவிடுகிறார்கள்.
இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் சமர்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள்
சில பதிப்பகத்தாரின் கட்டுரைகளை பல்கலைக்கழகங்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறது யுஜிசி எனப்படும் இந்திய பல்கலைக்கழக மானியக்குழு. இது தொடர்பாக, இதற்கு முன்பு அங்கு வேலை செய்து கொண்டிருந்த பேராசிரியர் லோக்சியா கூறும் போது, “இது போன்ற பிரசுரங்களில் இருந்து பெறப்படும் கட்டுரைகள் நம்பகத் தன்மை அற்றவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் யுஜிசியால் பராமரிக்கப்பட்டு வந்த 32,000 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சுமார் 4,305 கட்டுரைகளை கடந்த மே மாதம் நீக்கியிருக்கிறது யுஜிசி.
சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் விசாரணை
60 சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த என்.டி.ஆர் மற்றூம் டபுள்யூடிஆர் ஊடகத்துடன் இணைந்து செயல்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் கசியாபாத், மந்தசூர், மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளது.
ஒரு நிறுவனம் 700க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. மற்றொன்றோ சுமார் 96% சலுகை விலையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை விற்பனை செய்கிறது.
OMICS, IOSR Journals மற்றும் சயின்ஸ்டொமைய்ன் உட்பட பெரிய நிறுவனங்களின் கட்டுரைகளையும் சேர்த்து இதுவரை 1,75,000 கட்டுரைகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
OMICS நிறுவனம்
வெளியிடப்பட்டுள்ள சஞ்சிகைகள் - 785
பிரிவுகள் - மருத்துவம், மருந்தியல், பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை
கட்டுரைகளின் விலை - 149 டாலரிலிருந்து 1819 டாலர்
OMICS நிறுவனம் இந்தியாவில் இயங்கிவரும் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது. ஆந்திரா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஸ்ரீனுபாபு கெடலா என்பவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். இந்நிறுவனத்தின் கட்டுரைகளை கல்வி நிறுவனங்களில் வைக்க ஒப்புதல் அளித்தாலும், இதுவரை இவர்கள் எந்த கட்டுரையையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவில்லை.
இந்நிறுவனம் எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்களை கட்டுரை மேற்பார்வையாளர்களாக நியமித்திருப்பதாக கூறியது. ஆனால் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்கள்.
ஆஸ்டின்
வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் - 202
துறை - மருத்துவம், மருந்தியல்
விலை - 1800 டாலர்கள் வரை
இந்த நிறுவனமும் எக்கச்சக்கமான இணையதள கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. ஹைதராபத்தினை மையமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தினை மகேந்திர ரெட்டி மற்றும் அவரின் மனைவி சிவ பார்வதி ஆகியோர்கள் நிர்வாகித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 7000 கட்டுரைகளை பரிசுரித்திருக்கிறது. இந்த கட்டுரைகளின் ஆசிரியர்கள், இதனை மேற்பார்வை செய்யும் துறை சார் வல்லுநர்கள் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இவர்களின் இணையத்தில் இல்லை.
சயின்ஸ் டொமைன்
வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் - 111
துறை - மருத்துவம், அறிவியல், மற்றும் தொழில்நுட்பம்
விலை - 500 டாலர்கள் வரை
இதுவரை சுமார் 20,000 கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் இந்நிறுவனம், ஒரு கட்டுரைக்கு சுமார் 500 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான தம்பதிகளில் ஒருவர் எம்.டெக் முடித்துள்ளார். அவரின் மனைவி முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் என்று அவர்களின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தங்களின் நான்கு கட்டுரைகள் யுஜிசியில் இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் யுஜிசியில் விசாரித்த போது வெறும் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர்களிடம் பேசிய போது, எக்காரணம் கொண்டும் எங்களின் நிறுவனத்தினை “பிரிடேட்டர் ஜேர்னல்கள்” தயாரிக்கும் நிறுவனம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்கள்.
IAEME
வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் - 126
துறை - தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை
விலை - 170 டாலர்களில் இருந்து 550 டாலர்கள் வரை
இந்த இணையம் IAEME (International Association of Engineering and Management Education) என்ற பெயரில் இயங்கி வருகிறது. பாலசுப்ரமணியம் என்ற முனைவர் பட்டம் பெற்றவர் இதனை நடத்தி வருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்குள் பிரசுரிக்கும் என்றும் தங்களுடைய ஏழு கட்டுரைகள் யுஜிசியில் இடம் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை 5 கட்டுரைகளை மட்டுமே யுஜிசியில் காண முடிந்தது. இது தொடர்பாக அவர்களிடம் பேச முற்பட்ட போது, இணையத்தில் என்ன இருக்கிறதோ அதைத் தவிர பிற விபரங்களை பகிர இயலாது என்று கூறிவிட்டது.
IJRDO Journals, IOSR Journals, ARSEAM, IASTEM என நீளும் இந்த பட்டியலில், அவர்களின் இணையத்தில் ஒரு விபரம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதனை விசாரித்தால் வேறொன்றாக அது இருக்கும்.
To read this article in English
உங்களின் பணத்தினை கொடுத்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையினை வெளியிட வேண்டுமென்றால் ஒரு முறைக்கு பல முறை யோசித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.