இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள், நட்சத்திர ஹோட்டலில், ஆடம்பரமான அலுவலகங்கள் மற்றும் உண்மை என்று நம்பத்தகுந்த வகையில் இருக்கும் ஆஃபர் லெட்டர்கள் கொடுத்து கனடாவில் வேலை இருப்பதாக கூறி வட இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் உள்ள 150 பேரிடம் நிதி மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விளம்பரங்கள் மற்றும் ஆஃபர் லெட்டர்களை பார்த்து பலரும் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க : Instagram ads, ‘legitimate’ offer letters: How ‘firm’ duped over 150 with promises of jobs in Canada
கனடாவில் வேலை வாய்ப்புகளை உறுதியளித்த ஒரு நிறுவனத்திடம் பணம் கட்டும்படி கூறியுள்ளனர். அதனை நம்பி பணம் கட்டியநிலையில், எட்டு மாதங்களுக்கும் மேலாக அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் அதன்பிறகு, வேலைகள் எதுவும் இல்லை மற்றும் நிறுவனம் போலியானது என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், ராஜஸ்தான், ஹரியானா, உ.பி., மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 23 பேர் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் (EOW) புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று பேர் மீது மோசடி மற்றும் கிரிமினல் சதி ஆகிய IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வார தொடக்கத்தில், பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த கிங்பின் என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த பெண்ணிடம் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியது என்றும், அவர்களில் 29 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தின் மூலம் மொத்தம் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமாற்றப்பட்டவர்களில் நிஷாந்த் சிங்கும் ஒருவர். 29 வயதான அவர் அமிர்தசரஸைச் சேர்ந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு, இனி ஒரு விவசாயியாக இருக்க விரும்பவில்லை என்று முடிவு செய்த அவர், நண்பர்கள் பலர் வேலைக்காக வெளிநாடு செல்வதைக் கண்டார். அப்போது தனது நண்பர் ஒருவரிடம் வெளிநாடு செல்வது தொடர்பாக கேட்டபோது அந்த நண்பர் இந்நிறுவனத்தை பற்றி கூறியுள்ளார். நண்பரின் யோசனையை கேட்ட நிஷாந்த் சிங் அந்நிறுவனத்தை அணுகினார். தற்போது அவர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தில் இருந்தவர்கள் பேசிய விதம் எனக்கு பிடித்திருந்தது, அவர்கள் மிகவும் தொழில்முறையாகத் தெரிந்தார்கள் என்று தனது புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து நிஷாந்த் சிங் மேலும் கூறுகையில், வேலைக்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகு, நிஷாந்த் சிங் ரோகினியில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு சென்றபோது, ஜிஎஸ்டி எண்ணுடன் கூடிய சீட்டை கொடுத்தனர். இதற்காக பதிவுக் கட்டணமாக 5,900 ரூபாயும், பயோமெட்ரிக்ஸுக்கு 20,000 ரூபாயும் கட்ட வேண்டும் என்று கூறினர். அந்த பணத்தை கட்டிவிட்டு வந்த பின்னர், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பணம் கேட்க தொடங்கினர்.
இந்த முறை மருத்துவ காப்பீட்டிற்கு ரூ. 30,000, பின்னர் ஸ்பான்சர்ஷிப் கட்டணமாக ரூ. 70,000, விமானக் கட்டணமாக ரூ.1.05 லட்சம் என்று கேட்டுள்ளனர். "இந்த கட்டத்தில், ஏதோ தவறு இருப்பதாக நான் சந்தேகிக்க ஆரம்பித்தேன். எனக்கு விசா கிடைக்காத நிலையில், டிக்கெட்டுகள் எப்படி முன்பதிவு செய்யப்படுகின்றன என்று கேட்டேன். "மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு தள்ளுபடி கிடைக்கும் என்றும், டிக்கெட் விலை இப்போது குறைவாக இருப்பதாகவும் அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். டிக்கெட்டுகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுத்தபோது, அவர்கள் என்னை மிரட்டினர்கள், என்று கூறியுள்ளார்.
இந்த மோசடி நிறுவனத்திற்கு சுமார் ரூ.3.20 லட்சம் கட்டணமாக செலுத்திய பிறகு கடைசியில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று தெரிந்ததும் என் தந்தை மனமுடைந்துபோனார்."அவர் அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள என் சகோதரி அப்பாவை பார்க்க வந்தார். சில நாட்களுக்குப் பிறகு அபபா இறந்துவிட்டார்," "இப்போது, கடன்காரர்கள் மற்றும் நான் கடன் வாங்கிய உறவினர்கள் என் தந்தையின் மரணத்தால் என்னைத் தனியாக விட்டுவிட்டார்கள். பிறகு எப்படி அவர்களைக் காப்பாற்றுவேன் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட பெண், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற முதலில் ஒரு சிறிய தொகையை எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு அவர்கள் மேலும் பணம் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் தங்கள் அழைப்புகளை எடுப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் அலுவலகங்களை மூடும்போது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்வார்கள். இந்த முறை பதிண்டா, டெல்லி மற்றும் சண்டிகர் உட்பட பல்வேறு நகரங்களில் 150 நபர்கள் மோசடிக்கு இரையாகியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்ட்இன் ஆகியவற்றில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் கட்டண விளம்பர விளம்பரங்கள் உட்பட சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தினர், மேலும் பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுக்க டெலிமார்க்கெட்டர்களை கூட பணியமர்த்தியுள்ளனர். இந்த சூழ்ச்சியைத் தொடர, மோசடி செய்பவர்கள் வான்கூவரில் வேலை வாய்ப்புக்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி ஆஃபர் லெட்டர்கள் வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.