ரத்தாகிறது முத்தலாக்... அவசர தடுப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் சொல்லி விவாகரத்து கேட்கும் நபர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை...

முத்தலாக் அவசர தடுப்புச் சட்டம் : இஸ்லாமிய மதத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறுவது நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் சட்ட மசோதா கடந்த வருடம் கொண்டு வரப்பட்டது.

மாநிலங்களவையில் இம்மசோதாவிற்கு ஆதரவு கிடைக்காத காரணத்தால் கடந்த வருடம் இச்சட்டத்தினை பாஜக அரசால் நிறைவேற்றா முடியவில்லை. ஆனால் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை கூடியது. அதில் அவசர தடுப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முத்தலாக் அவசர தடுப்புச் சட்டம்

பாதிப்பிற்கு உள்ளான பெண்ணோ அல்லது அவரின் குடும்ப உறுப்பினரோ சம்பந்தப்பட்ட ஆணின் மீது புகார் தெரிவிக்கலாம்.

கணவரும் மனையும் புரிதலின் பெயரில் வாழ விரும்பும் பட்சத்தில் புகார் திருப்பிப் பெறப்படும். ஆனால் அதற்கு அப்பெண் முன் வந்து புகாரினை திரும்பப் பெற வேண்டும்.

மனைவியின் வேண்டு கோள்களுக்கு இணங்கவே கணவனுக்கு பெயில் வழங்கப்படும்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை மனைவியோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முத்தலாக் நடைமுறைக்கும் கடவுள் மீதான நம்பிக்கைக்கும் வழிமுறைகளுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. இது ஆண் பெண் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அவசரச் சட்டம் ஆகும் என மத்திய நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிடு பேசியிருக்கிறார்.

To read this article in English

சென்ற வருடம் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டவில்லை. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அவரச்சட்டத்தின் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் கணவர்களுக்கு மூன்று வருடம் வரை சிறை தண்டனை பெற்றுத் தர இயலும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close