சர்வதேச அளவிற்கு தகுதி உயர்த்தப்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது மத்திய அரசு. அதில் மூன்று தனியார் பல்கலைக்கழகங்களும் மூன்று அரசு பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றிருந்தன. தனியார் பல்கலைக்கழகமான பிட்ஸ் பிலானியை (BITS Pilani) திடீரென இப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.
பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் (IISc ), மும்பை இந்திய தொழில் நுட்பக்கழகம் (IIT Mumbai), டெல்லி இந்திய தொழில் நுட்பக்கழகம் (IIT - Delhi)போன்ற அரசு கல்வி நிலையங்களும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்க்கல்வி அக்காடெமி, மற்றும் ஜியோ பல்கலைக்கழகம் போன்ற தனியார் நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிட்டார் கமிட்டித் தலைவர் கோபாலசாமி.
ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு கூறியிருக்கும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு பிட்ஸ் பிலானி இயங்கவில்லை என்று காரணம் கூறி அந்த பட்டியலில் இருந்து பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தின் பெயரினை நீக்கி உள்ளார்கள்.
2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இயங்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இருக்கிறது.
இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு கீழ் பிட்ஸ் பிலானியின் கோவா மற்றும் ஹைதரபாத் கிளைகள் கீழ் செயல்படவில்லை என்றும் அந்த கிளைகளின் செயல்பாடுகளை நிறுத்தக் கோரியும் ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழு பிட்ஸ் பிலானியிடம் தகவல் கூறியிருக்கிறது.
To read this article in English
ஆனால் பிட்ஸ் பிலானியோ “இவ்விரு கிளைகளும் 2004 மற்றும் 2008ம் ஆண்டுகள் கட்டப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திட்டங்கள் 2015ல் கொண்டுவரப்பட்டவை. அதனால் மானியக் குழுவின் சட்டங்களுக்கு புறம்பாக அவை செயல்படவில்லை என்றும், அதனால் அவைகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த முடியாது” என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது பிலானி.
இந்த பெயர் நீக்கம் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறையினரிடம் கேட்ட போது, பிட்ஸ் பிலானி நிர்வாகம் அவர்களின் வழக்கினை முடித்துக் கொண்டு, மானியக் குழுவின் ஒப்புதல் பெற்றால் மீண்டும் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.