கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில பிரதமர் நரேந்திர மோடியின் புத்தகம் அகற்றப்பட்டதை எதிர்த்து கேரள பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த 'மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி (Modi@20: Dreams Meet Delivery)' என்ற தலைப்பிலான புத்தகத்தை அகற்றியதாக கேரள பாஜக வெள்ளிக்கிழமையன்று சர்ச்சையைக் கிளப்பியது. இதனை பாகிஸ்தான் அணுகுமுறை என பாஜக கூறியுள்ளது.
இந்த நிலையில், புதிய புத்தகங்கள் 15 நாள்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டன என நூலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் சுசீந்திரன், “பல்கலைக்கழக அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பையும், நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தையும் அவமதித்துள்ளனர். நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்… பல்கலைகழக அதிகாரிகளின் தாலிபானிசத்தை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.
மேலும், “இந்தச் சகிப்பின்மை, கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுவதாகக் கூறும் சிபிஐ(எம்) ஆளும் மாநிலத்தில் நடந்துள்ளது.
புத்தகத்தின் மீதான தடையை பல்கலைக்கழகம் நீக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து வளாகங்களிலும் பாஜக புத்தக விழாவை நடத்தும்” என்று அவர் மேலும் கூறினார்.
‘மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது, இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சுதா மூர்த்தி உள்ளிட்ட 22 உயரதிகாரிகள் எழுதிய 21 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.
இந்தச் சர்ச்சைக்கு பதிலளித்த டாக்டர். முகம்மது ஹனீபா, “இந்தப் புத்தகம் செப்.டம்பர் 15ஆம் தேதி முதல் அகற்றப்பட்டது. ஒவ்வொரு புத்தகமும் முதல் 15 நாள்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டன” எனத் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக நாக் கமிட்டி வரும் நாளில் இதை சர்ச்சையாக்க விரும்பவில்லை. புத்தகம் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil