International Tiger Day 2020 : Tigers and tiger habitats at the western ghats : உலக நாடுகள் ஜூலை 29ம் தேதி அன்று உலக புலிகள் தினத்தை கடைபிடிக்கின்றது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான புலிகளின் புகலிடமாக நீடித்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலைகள். (2015ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் படி கர்நாடகாவின் நாகராஹோலே, பந்திப்பூர், தமிழகத்தின் முதுமலை, சத்தியமங்கலம், மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் மட்டும் 570 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது)
இந்தியாவில் புலிகள் காப்பகம்
புலிகளின் புகலிடத்தை பாதுகாக்கவும், புலிகளுக்கான சிறந்த புகலிடத்தை உருவாக்கவும், அதன் தேவை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் இந்த புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து புலிகள் வேட்டையாடப்பட்டு வந்ததால், அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டு, 1973ம் ஆண்டில் இருந்து புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டன.
1973ம் ஆண்டு பனாமா என்ற இடத்தில் தான் முதலில் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. 1973-1974 ஆண்டுகளின் போது புலிகள் உயர்ந்தது. 1980களில் புலிகள் காப்பகங்களின் நிலப்பரப்பு 9115 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக இருந்தது. ஆனால் தற்போது இது 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக விரிவாக்கப்பட்டு தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளது.
புலிகளின் அரணாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்
நீலகிரி மாவட்டத்தில் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முதுமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. தற்போது 367 கிமீ வரை புலிகள் நடமாட்டம் உள்ளது. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை என 4 புலிகள் காப்பகங்களும், கேரளத்தில் பெரியார் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பங்களும், கர்நாடகாவில் பந்திப்பூர், பத்ரா, தந்தேலி அன்ஷி, பிலிகிரி ரங்கநாதா கோவில், மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் புலிகள் காப்பகங்கள் இயங்கி வருகிறது.
வடக்கில் இருந்து தெற்காக சிறிதும் இடைவெளியின்றி (பாலக்காடு கணவாய் தவிர்த்து) 1600 கி.மீ நீளத்திற்கு நீண்டு நெடியதாக அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. தாபி நதியில் இருந்து கன்னியாகுமரி வரை, அரபிக் கடலை ஒட்டியவாறு இருக்கும் இந்த மலையும் மலைக்காடுகளும் புலிகளுக்கு புகலிடமாக அமைந்திருப்பதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை. 1 சதுர கிலோ மீட்டருக்கு 318 மக்கள் என்ற மக்கள் அடர்த்தியை இந்த பகுதி கொண்டுள்ளது. பல்வேறு தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வுகள் முடிவுகள் சற்று கவலை அளிக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது. 2006 முதல் 2014 வரையான காலகட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தாலும் 2018 கணக்கெடுப்பு புலிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவின் நாகராஹோலே, பந்திப்பூர், தமிழகத்தின் முதுமலை, சத்தியமங்கலம், மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தற்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 724 ஆக உள்ளது.
மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?
ப்ரோஜெக்ட் ட்ரைகர் என்ற நோக்கத்தை கையில் கொண்டு, இந்தியாவில் அழிந்து வரும் புலிகளை காக்கும் வகையில் இந்த சர்வே மற்றும் அதன் முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களின் தொகுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.