Yoga Day 2018: சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட யோகா தின பயிற்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். யோகா தினத்தை முன்னிட்டு 'டுவிட்டரில்' பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'யோகா, உடலை சரியான முறையில் வைத்திருப்பதற்கான பயிற்சி மட்டுமல்ல; நம் உடல் நலம் சீராக இருப்பதற்கும் உதவும் என குறிப்பிட்டுள்ளார். 2014ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், இதே நாளில் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அவர் அவர்கள் நாட்டில் யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
டேராடூனில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகள். இன்று சூரியன் உதிக்கும் இடமெல்லாம் யோகா நடைபெறுவதால், இந்தியா பெருமை கொள்கிறது. தினசரி யோகா செய்து, சூரியனை நல்வரவு செய்வோம்.
Yoga Day 2018 : பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்பு
10.30 am : சென்னை மாநகர காவல் துறை சார்பாக சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 800 க்கும் மேற்ப்ட்ட காவல் துறையினர் யோகா பயிற்சி செய்தனர்.
Yoga Day 2018 : சர்வதேச யோகா தினம் 2018 காவலர்கள் யோகா பயிற்சி
10.20 am : பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா தின பயற்சி
10.00 am : முன்னாள் பிரதமர் தேவகவுடா யோகா செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Yoga Day 2018 : சர்வதேச யோகா தினம் 2018 தேவகவுடா யோகா பயிற்சி
9.45 am : ராஜஸ்தானில் சர்வதேச யோகா தினத்தில் ஒரே இடத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து யோகா செய்து கின்னஸ் முயற்சி.
Yoga Day 2018 : சர்வதேச யோகா தினம் 2018 கின்னஸ் முயற்சி
9.30 am: டெல்லியில் நடைப்பெற்ற யோகா தின பயிற்சியில் பிரான்ஸ் நாட்டின் கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஆசன பயிற்சி.
Yoga Day 2018 : சர்வதேச யோகா தினம் 2018 கொண்டாட்டம்
9.00 am: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியிருந்தார்.
8.20 am: குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தலைமையில் நடைப்பெற்ற பிரம்மாண்ட யோகா பயிற்சி.
Yoga Day 2018 : சர்வதேச யோகா தினம் 2018 கொண்டாட்டம்
8.00 am: மும்பையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின பயிற்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்கினார்.
Yoga Day 2018 : சர்வதேச யோகா தினம் 2018 வெங்கய்யா நாயுடு பங்கேற்பு
இன்று(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் ஆரோக்கியம் பேண, நல்வாழ்வு பெற யோகாவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.