மூக்குவழியாக தடுப்பூசி அறிமுகம்: புதிய முயற்சியின் அடையாளம் - மத்திய அரசு - Intranasal Covid vaccine launched; symbol of innovation Govt | Indian Express Tamil

மூக்கு வழியாக தடுப்பூசி அறிமுகம்: புதிய முயற்சியின் அடையாளம் – மத்திய அரசு அங்கீகாரம்

மூக்குவழியாக செலுத்தப்படும் தடுப்பூசியான இன்னோவாக் முதன்மை டோஸ் தடுப்பூசியாகவும் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ்களுக்கு பிறகு, பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தலாமா என மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

covid nasal vaccine launched, covid intranasal vaccine launched, bharat biotech covid vaccine, mansukh mandaviya, incovacc launched, jitendra singh

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியான இன்னோவாக் (iNCOVACC) முதன்மை டோஸ் தடுப்பூசியாகவும் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ்களுக்கு பிறகு, பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தலாமா என மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி இந்தியாவில் கோவிட் தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, பாரத் பயோடெக் குடியரசு தினத்தன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அதன் மூக்குவழியாக செலுத்தப்படும் இன்னோவாக் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே இரண்டு டோஸ் கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசி மூன்றாவது பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தப்பட உள்ளது. பெரிய ஆர்டர்களை வழங்கும் மத்திய மாநில அரசுகளுக்கு ரூ. 325 விலையிலும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 800 விலையிலும் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊசி இல்லாமல் மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பூசி ஏற்கெனவே அனுமதி வாங்கிய மருத்துவமனைகளில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி ஏற்கனவே அரசாங்கத்தின் தடுப்பூசி போர்ட்டல் கோவின்-னில் சேர்க்கப்பட்டுள்ளது.

“குடியரசு தினத்தன்று அமைச்சர் ஜிதேந்திர சிங் உடன் இணைந்து கோவிட்க்கான உலகின் முதல் மூக்குவழியாக செலுத்தப்படும் தடுப்பூசியான இன்னோவாக்-கை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திறமையின் வலிமை இது. இந்த சாதனைக்காக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்! இது ஒரு வரலாற்று சாதனை. நமது விஞ்ஞானிகளின் புதுமையான முயற்சிக்கு ஒரு சான்று” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 200 தொற்றுகள் பதிவாகி வரும் நிலையில், இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுகிறது. சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் தொற்றுகளீன் எண்ணிக்கை அதிகரித்ததால், பூஸ்டர் டோஸ்களை அதிகரிக்க வேண்டி இருந்தபோது, டிசம்பர் இறுதியில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தியாவில் இதுவரை 22.4 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது அனைத்து வயதுப் பிரிவினரில் சுமார் 27 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு அரசாங்கத்தின் 75 நாள் இலவச தடுப்பூசி இயக்கம் இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறைவாகவே இருந்தது.

கோவிட்க்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட முதல் மூக்குவழி தடுப்பூசி இன்கோவாக் ஆகும். இது மூக்கு மற்றும் வாயில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, தொற்றுக்கு எதிராக சிறப்பாகப் பாதுகாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதன்மை தடுப்பூசி அளவு 90 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், “இன்கோவாசிசி இன் அறிமுகம் மூலம், இன்ட்ராநேசல் டெலிவரிக்கான நாவல் தடுப்பூசி விநியோக தளத்தை நிறுவும் எங்கள் இலக்கை அடைந்துள்ளோம். இந்தியா தனக்காகவும் உலகத்திற்காகவும் புதுமைகளை உருவாக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. எதிர்கால கோவிட்-19 வகைகள் மற்றும் எதிர்கால தொற்று நோய்களுக்கு நாமும் நாடும் நன்கு தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Intranasal covid vaccine launched symbol of innovation govt