Karnataka | England: இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் நிதாஷா கவுல். இவர் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் பெங்களூருவில் ஆளும் காங்கிரஸ் அரசின் சமூக நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை மாநாடு' நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டார்.
கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தனக்கு அனுப்பிய அழைப்பின் நகல் மற்றும் நிகழ்ச்சிக்கான தனது பதிவு விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்ட நிதாஷா கவுல், “எங்களால் எதுவும் செய்ய முடியாது, டெல்லியில் இருந்து உத்தரவு’ என்பதைத் தவிர, குடியேற்ற அதிகாரிகள் எனக்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. எனது பயணம் கர்நாடகா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு என்னிடம் அதிகாரப்பூர்வ கடிதம் இருந்தது. நான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டேன் என்று டெல்லியில் இருந்து எனக்கு முன்கூட்டியே எந்த அறிவிப்பும் அல்லது தகவலும் கொடுக்கப்படவில்லை.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Invited by Karnataka govt for event, UK prof claims sent back by Immigration
இது தொடர்பாக பேச தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அமைச்சர் மகாதேவப்பாவைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் தவிர, பல எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். பேராசிரியை நிதாஷா கவுல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து முதல்வர் அலுவலகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியை நிதாஷா கவுல் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை (Overseas Citizenship Of India) அட்டை வைத்திருக்கும் தனக்கு இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதிநிதியாக அழைக்கப்பட்டதாகவும், எந்த குழு விவாதத்திலும் பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.
பெங்களூருவில் தரையிறங்கிய பிறகு, குடியேற்ற அதிகாரிகள் தன்னை பல மணிநேரம் காத்திருக்கச் செய்ததாகவும், 24 மணிநேரம் தடைசெய்யப்பட்ட காத்திருப்போர் அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும், உணவு மற்றும் தண்ணீரை எளிதில் அணுக முடியாது என்றும், தலையணை மற்றும் போர்வை போன்ற அடிப்படை விஷயங்களுக்காக விமான நிலையத்திற்கு டஜன் கணக்கான அழைப்புகளைச் செய்ய வேண்டியிருந்தது என்றும், அதைக்கூட "அவர்கள் வழங்க மறுத்துவிட்டனர்" என்றும் நிதாஷா கவுல் குற்றம் சாட்டினார்.
நிதாஷா கவுல் இந்தியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தரையிறங்கிய நிலையில், மறுநாள் சனிக்கிழமை காலை அடுத்த நேரடி விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் பெங்களூரு விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.
"டெல்லியின் அறிவுறுத்தலின் பேரில் நான் திருப்பி அனுப்பப்படுவதாக எனக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்களுக்கு அறிவுறுத்திய நிறுவனத்தின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. மேலும் இது எனக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படவில்லை. மேலும், நான் திருப்பு அனுப்படுவதற்கான காரணத்தை என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை. நான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், என்னை மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும்படி விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மட்டுமே எனக்கு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ்-ஐ தொடர்ந்து விமர்சிப்பவன் நான்தானா? என்று குடியேற்ற அதிகாரிகள் தொடர்ந்து கேட்டனர். அது எனக்கு வியப்பாக இருந்தது." என்று கூறினார்.
திரும்ப அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசாங்கத்திடம் முறையாக கேள்வி எழுப்புவீர்களா? என்று கேட்டதற்கு, அவர் இங்கிலாந்து வந்துவிட்டதால் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை என்றார்.
IMPORTANT: Denied entry to #India for speaking on democratic & constitutional values. I was invited to a conference as esteemed delegate by Govt of #Karnataka (Congress-ruled state) but Centre refused me entry. All my documents were valid & current (UK passport & OCI). THREAD 1/n pic.twitter.com/uv7lmWhs4k
— Professor Nitasha Kaul, PhD (@NitashaKaul) February 25, 2024
இந்த சம்பவத்தில் மாநாட்டு அமைப்பாளர்கள் தலையிட முயன்றனர் மற்றும் அவரது நுழைவுக்கு உதவ டெல்லிக்கு தொலைபேசி அழைப்புகள் செய்துள்ளனர். ஆனால் எந்தப் பலனும் இல்லை என பெயர் தெரிவிக்க விரும்பாத மாநாட்டில் ஈடுபட்ட ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார், “மற்ற நாடுகளைச் சேர்ந்த ஐந்து-ஆறு பிரதிநிதிகளும் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். நாங்கள் தலையிட்டு அவர்களின் நுழைவுக்கு உதவ முடிந்தது. ஆனால் டாக்டர் கவுலை அழைத்து வர நாங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவர்கள் அவரை மீண்டும் திரும்ப அனுப்பினர்.
நிதாஷா கவுல் நாடுகடத்தப்படுவது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், "இந்தியாவை உடைக்க விரும்பும் பாகிஸ்தானிய அனுதாபியை அழைத்ததன் மூலம் இந்திய அரசியலமைப்பை காங்கிரஸ் அவமதிப்பதாக" கர்நாடக பா.ஜ.க குற்றம் சாட்டி இருந்தது.
“கர்நாடக மக்கள் வரிப் பணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்காக பயங்கரவாத ஆதரவாளர்கள், நகர்ப்புற நக்சல்கள், தேசவிரோதிகள், கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிதியை அனுப்புகிறது. இதுபோன்ற இந்திய எதிர்ப்பாளர் இந்தியாவிற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் பிடிபட்டது மற்றும் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு நமது பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு நன்றி" என்று பா.ஜ.க மாநில பிரிவு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.