INX Media case : 2007ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர் ப.சிதம்பரம். வெளிநாட்டு நிறுவனமான ஐ.என்.எக்ஸ். இந்தியாவில் முதலீடு லஞ்சம் பெற்றதாக ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் என இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
INX Media case – சி.பி.ஐ வழக்கு தொடர அனுமதி
ப.சிதம்பர மீது சி.பி.ஐ வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் சட்ட அமைச்சகம் மத்திய உள்த்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் “ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர சட்டரீதியாக வலுவான காரணங்கள் உள்ளன. அதனால் சி.பி.ஐ. வைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரலாம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஐ.என்.எக்ஸ் வழக்கு மட்டுமல்லாமல், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்திலும் முறைக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.
நிதியமைச்சராக செயல்பட்ட போது, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ்களை இந்நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக இந்நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.