scorecardresearch

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

ED arrests P Chidambaram in INX media case : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

p chidambaram, chidambaram in jail, chidambaram in tihar, inx media case, chidambaram inx media case, chidambaram ed arrest
Tamil Nadu news today in tamil,

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதற்கு, காங்கிரஸ் ஆட்சியின்போது, 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மோசடி நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ., அமைப்பை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.
சிதம்பரத்தின் காவல், நாளை(அக்.,17ம் தேதி) உடன் முடிவடைகிறது. இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, ‘நீதிமன்ற வளாகத்தில், சிதம்பரத்தை, 30 நிமிடங்கள் விசாரிக்கலாம்; அதன் பிறகு, காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யலாம். திகார் சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை கைது செய்யலாம்’ என, நீதிமன்றம் கூறியது. இதற்கு, ‘நீதிமன்ற வளாகத்தில் அவரை விசாரிக்கிறோம். இங்கேயே அவரை கைது செய்கிறோம்’ என, அமலாக்கத் துறை கூறியது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ‘அவருடைய கவுரவத்தையும் பார்க்க வேண்டும். பொது இடத்தில் வைத்து கைது செய்யக் கூடாது’ என, நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து திகார் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர், சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். 2 மணி நேரம் விசாரணை முடிந்த நிலையில், சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதனிடயே, சிதம்பரத்தை பார்க்க அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், திகார் சிறை வந்திருந்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Inx media case p chidambaram arrest ed tihar jail

Best of Express