ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம் என்ன?

விசாரணை முடியும் வரை ஜாமீன் இல்லையென்றால் அனைவரும் ஜெயில் தான் இருக்க வேண்டும் – சிதம்பரம் தரப்பு வாதம்

P Chidambaram's response on lockdown extension

INX media case P Chidambaram bail issue :  முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையினர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் ”ஈர்ப்பின்” காரணமாக ஜாமீன் வழங்க மறுக்கின்றனர். இதே சூழல் நீடித்தால் விசாரணையில் இருக்கும் ஒருவருக்கு பெயிலே கிடைக்காது” என்று நேற்று உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்

நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ். போபண்ணா, ஹ்ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் ப.சிதம்பரத்திற்காக வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். அப்போது அவர் தன்னுடைய மனுதாரர் ஆதாரங்களை அழிக்கவோ, மாற்றவோ முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். இதே நிலை தொடருமானால், ஒவ்வொரு வழக்கின் விசாரணை முடியும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் ஜெயில் தான் தங்களின் நேரத்தை கழிக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரணைக்காக வருதல் உறுதி செய்யப்பட்டால் யாருக்கும் ஜாமீன் மறுக்க கூடாது. தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் பிரச்சனைக்குரியவர்களுக்கு மட்டுமே இது போன்று தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படலாம். இந்த குற்றங்கள் மீதான ஈர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கும். வழக்கு முடியும் வரை தன்னுடைய மனுதாரர் ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்று கூறுவது ஒரு அபத்தமான முடிவாக இருக்கும் என்று அவர் வாதிட்டார்.

To read this article in English

வானத்தை தொட்ட வெங்காய விலை… கவலையில் பொதுமக்கள்

கபில் சிபில் வாதம்

மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் இது குறித்து பேசுகையில் “சாட்சியங்கள் 2018ம் ஆண்டில் இருந்தே இருக்கின்றார்கள். அப்போதெல்லாம் அமலாக்கத்துறை விசாரிக்க முன்வரவில்லை. எவ்வளவு நாள் சிறைக்குள் சிதம்பரத்தை வைக்க வேண்டுமோ அவ்வளவு அதிக நாட்கள் அவரை சிறைக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஏதும் இதற்கு பின்னால் இல்லை” என்றும் வாதிட்டார். சி.பி.ஐ கஸ்டடி முடிந்த பின்னரும் சிதம்பரத்தை யாரும் விசாரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் இடம் பெற்றிருக்கும் ஃபைண்டிங்குகள் மட்டுமே எதிர் வாக்குமூலத்தில் இடம் பெற்றிருக்கிறது. எதிர் வாக்குமூலம் எப்படி ஃபைண்டிங்குகளை கொண்டிருக்கும். இது எந்த வகையான நீதித்துறை செயல்பாடுகள். என்னிடம் இருந்து ஒரு மெயிலோ, எஸ்.எம்.எஸோ அனுப்பப்பட்டதாக இதுவரை ஒன்றுமே கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு ஆவணத்தையும் இவர்களால் கண்டறிய இயலவில்லை. ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து இதர குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் பெயில் வழங்கப்பட்டுவிட்டது என்றும் அவர் வாதாடினார்.

11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற விசாரணை

அமலாக்கத்துறையினரால் போடப்பட்டிருக்கும் ஐ.என்.எக்ஸ் பணமோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டிக்கு அறிவிக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் என்.கே. மத்தா மற்றும் நிதேஷ் ராணா வாதாடினார்கள். அவர்களின் வாதத்தை தொடர்ந்து சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் தன்னுடைய உத்தரவை அறிவித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Inx media case p chidambaram bail issue if bail denied over gravity of allegations all undertrials would be in jail

Next Story
மகாராஷ்டிரா: முதவராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, என்சிபி துணை முதல்வர், காங்கிரஸ் சபாநாயகர்Maharashtra: Uddhav will take charge today, NCP gets Deputy CM, Congress Speaker
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com