ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்துக்கு அக்.,3ம் தேதி வரை சிறைவாசம்
INX Media case - Chidambaram custody extended - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தகாலத்தில், மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற உதவினார் என்பதுதான் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது 2017ம் ஆண்டில், சிபிஐ ஊழல் வழக்கையும், அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கையும் பதிவு செய்தன.
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், கோர்ட் உத்தரவுப்படி, 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்தனர். அவரது நீதிமன்ற காவல் இன்று(செப்., 19) முடிவடைந்தது.
இதனையடுத்து, டில்லி சிபிஐ கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரம் நீதிமன்றம் சென்றநாள் முதல், வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கபில் சிபல் எதிர்ப்பு : சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்ற காவல் நீட்டிப்பு குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிதம்பரத்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மேலும் அவருக்கு தேவையான உணவு வகைகள் நீதிமன்ற காவலின்போது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.