Advertisment

இன்ஸ்டாவில் ஐ.பி.சி கோட்; பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்ட சிறார்களை பொறிவைத்து பிடித்த டெல்லி போலீஸ்

சமீபத்தில் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து வெளியே வந்த 17 வயது சிறார்கள் பலமுறை போலீசாரிடம் தப்பியுள்ளனர். இந்த மாதம், 3 நாட்களில், 3 பேரும் வெல்கம், ஜாஃப்ராபாத் மற்றும் பஜன்புரா ஆகிய இடங்களில் பலரின் வாகனங்களை கொள்ளையடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர்.

author-image
WebDesk
New Update
Northeast Delhi, instagram, Delhi Police, Delhi cops track juveniles, Delhi news, New Delhi, Indian Express, current affairs

சமீபத்தில் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து வெளியே வந்த 17 வயது சிறார்கள் பலமுறை போலீசாரிடம் தப்பியுள்ளனர். இந்த மாதம், 3 நாட்களில், 3 பேரும் வெல்கம், ஜாஃப்ராபாத் மற்றும் பஜன்புரா ஆகிய இடங்களில் பல நபர்களின் வாகனங்களை கொள்ளையடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர்.

Advertisment

கடந்த சில மாதங்களாக, வடகிழக்கு டெல்லியில் உள்ள பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் பார்வையில் பெயர் வாங்குவதற்காகவும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 3 சிறார்களும் டெல்லி காவல்துறைக்கு தலைவலியாக மாறினர்.

சமீபத்தில் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து வெளியே வந்த 17 வயது சிறார்கள் பலமுறை போலீசாரிடம் தப்பியுள்ளனர். இந்த மாதம் மூன்று நாட்களில் 3 பேரும் வெல்கம், ஜாஃப்ராபாத் மற்றும் பஜன்புரா ஆகிய இடங்களில் பல நபர்களின் வாகனங்களை கொள்ளையடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர்.

இருப்பினும், அவர்களின் இன்ஸ்டாகிராம் பயனர் பெயருக்கு பின்னால், IPC பிரிவு 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) என்று வைக்கப்பட்டது. அதில் அவர்கள் மக்களை அச்சுறுத்துவதாகக் கூறப்படும் வீடியோக்கள் மற்றும் ஒரு மனிதனைக் கொல்லும் அவர்களின் திட்டங்களைப் பற்றி பெருமையாகக் கூறுகிறார்கள். இது இந்த திருடன் போலீஸ் விளையாட்டை முடிவுக்கு கொண்டுவந்தது.

எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி மக்கள் மீது சிறார் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சிறப்பு போலீஸ் கமிஷனர் (குற்றப் பிரிவு) ரவீந்திர யாதவ் தெரிவித்தார். “லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பார்வையில் அவர்கள் புகழ் பெற விரும்பியுள்ள்னர். இந்த சிறார்களில் ஒருவர் அந்த கும்பல் உறுப்பினருடன் தொடர்பில் இருப்பதாக பெருமையாக கூறுகிறார்” என்று ரவீந்திர யாதவ் கூறினார்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் எதிர்கால குற்றங்களைச் செய்வதற்கான தங்கள் திட்டங்களைப் பற்றி இந்த சிறார்கள் பெருமையாக பேசுவார்கள் என்று காவல்துறைக்கு தெரியவந்ததாக அவர் கூறினார். “நாங்கள் அவர்கள் மீது தொழில்நுட்ப கண்காணிப்பை மேற்கொண்டோம். அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.” என்று கூறினார்.

ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “நாங்கள் பல சமூக ஊடக கணக்குகளை ஸ்கேன் செய்து, IPC பிரிவு 302 மற்றும் 307 போன்ற முக்கிய வார்த்தைகளை வைத்தோம். ஏனெனில், வளரும் குற்றவாளிகள் ஐ.பி.சி பிரிவுகளை அவர்கள் ஈடுபடும் குற்றங்களைப் பொறுத்து பெயரின் பின்னொட்டாகப் பயன்படுத்துகிறார்கள்… அதன் பிறகு, நாங்கள் 302 மற்றும் 307 உடன் முடிவடைந்த சந்தேகத்திற்குரிய இரு சிறார்களின் இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களைக் கண்டுபிடித்தோம்.” என்று கூறினார்.

அவர்கள் துப்பாக்கியை காட்டி, அடுத்த சில நாட்களில் ஒரு இளைஞரை கொன்று விடுவோம் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

“இந்த சிறார்களில் ஒருவரை தாக்கிய நபரை கொல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதை மற்றொரு சிறார் வீடியோவை படம்பிடித்தார். இது சிறார்களுக்கு குற்றவியல் வட்டாரங்களில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது” என்று அந்த அதிகாரி கூறினார்.

“இறுதியில், அவர்களின் இருப்பிடம் பொறி வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறார்களில் ஒருவர் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தங்கள் இலக்கைக் கொல்ல திட்டமிட்டிருந்ததால் நாங்கள் ஒரு கொலையைத் தடுத்தோம்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

விசாரணையின் போது, அந்த சிறாரும் அவரது கூட்டாளிகளும் சமீபத்தில் கொலை வழக்குகளில் சிறார் நீதி ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு இல்லத்திலிருந்து வெளியே வந்ததாகக் கூறினார்.

“ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா’ படத்தைப் பார்த்ததாகவும், மாயா டோலாஸின் ‘எதிர்மறை’ கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் அந்தச் சிறார் கூறினார். அவர் கதாபாத்திரத்தின் வாழ்க்கை முறை, குற்ற வழிகளைப் பின்பற்ற விரும்பினார்…” என்று ஒரு அதிகாரி கூறினார்.

நவம்பர் 15, 2021-;ல் காரவால் நகரில் ஒரு நபரைக் கொன்றதில் இந்த சிறுவனும் அவனது கூட்டாளிகளில் ஒருவனும் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். மேலும், அவரது கூட்டாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளியே வந்த பிறகு, இந்த சிறார்கள், கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நபர்களைச் சந்தித்து ஷிவ் விஹாரில் ஒருவரைக் கொன்றார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஒரு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியே வந்த அவர், தலைமறைவான இரு சிறார்களையும் சந்தித்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Delhi Instagram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment