ரொம்ப ஓவரா போறீங்கய்யா!! : திருமண வரவேற்பில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் போட்டி

திருமண வரவேற்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐபிஎல் போட்டியால், மணமக்களை பார்க்காமல், உறவினர்கள் ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

By: May 15, 2019, 5:07:20 PM

திருமண வரவேற்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டியால், மணமக்களை பார்க்காமல், உறவினர்கள் ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில், ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை நான்காம் முறையாக வென்றது.

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. வாட்சப் பார்வாடாக அதிகளவில் பகிரப்பட்டு வந்து வந்த இந்த வீடியோ, மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், ஐபிஎல் பைனல் என்பதால், பலர் இந்நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என எண்ணிய திருமண வீட்டார், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலேயே பெரிய திரையில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்தனர். அதுவே அவர்களுக்கு எதிராக அமைந்தது. வந்தவர்கள், மணமக்களை பார்க்காமல், கிரிக்கெட் போட்டியையே பார்த்து கொண்டிருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகமாக நடனமாடியும் குட்டிக்கரணம் போட்டும் கொண்டாடினர். பலர், பெரிய திரையின் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் கடைசிவரை யாரும் மணமக்களை கண்டுகொள்ளவில்லை என்பதே இந்த வீடியோவின் ஹைலைட்.
டுவிட்டரில் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Ipl final live streaming in wedding reception

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X