Advertisment

பாக். மீது ஈரான் தாக்குதல்- தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை புரிந்து கொள்வதாக இந்தியா பதில்

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத் புதன்கிழமை தெஹ்ரானில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரை வெளியேற்றியது.

author-image
WebDesk
New Update
Pak attacks Iran

Iran strikes Pakistan: Understand actions that countries take in self defence, says MEA

மேற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களைஈரான் குறிவைத்த ஒரு நாளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான "சமரசமற்ற" நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடித்தாலும், தங்கள் தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை புரிந்துகொள்வதாக இந்தியா புதன்கிழமை கூறியது.

Advertisment

பாகிஸ்தானில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை. இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். நாடுகள் தங்கள் தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ”என்று கூறினார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் அல் அட்லின் பயங்கரவாதக் குழுவின் இரண்டு தளங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் செவ்வாய்க்கிழமை குறிவைத்ததாக அதன் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஈரானிய பாதுகாப்புப் படையினரை குறிவைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத் புதன்கிழமை தெஹ்ரானில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரை வெளியேற்றியது.

இஸ்லாமாபாத் இந்த தாக்குதலை "சட்டவிரோத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்" என்று கூறியதுடன், பதிலளிப்பதற்கு பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து உயர்மட்ட பயணங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையில், பாகிஸ்தான் "தனது வான்வெளியில் அத்துமீறலை கண்டித்தது, மேலும்  இந்த தாக்குதல்களால் "மூன்று சிறுமிகள் காயம் அடைந்தனர். இரண்டு அப்பாவி குழந்தைகள் மரணம் அடைந்தனர், என்று கூறியது.

Read in English: Iran strikes Pakistan: Understand actions that countries take in self defence, says MEA

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment