IRCTC Cancelled Tatkal Ticket Refund Rule: ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்து பின்னர் ரத்து செய்தால் ஒரு சில அடிப்படைகளை கொண்டு மட்டுமே முழு பணம் திரும்ப பெற முடியும்.
வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக்கிங் என்றாலே ஐஆர்சிடிசி தான். ஒரு நாளில் மட்டுமே ஆயிரக்கணக்கானோர் இந்த இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர்.
IRCTC full Refund : ஐஆர்சிடிசி முழு பணம் வாபஸ்
ஆனால் ஒரு சிலர் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாத காரணத்தினால், டிக்கெட்டுகளை ரத்து செய்கின்றனர். அப்படி ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு பெரும்பாலும் முழு பணத்தை ஐ.ஆர்சிடிசி திரும்ப தருவதில்லை. இருப்பினும் ஒரு சில அடிப்படையில் சில நேரங்களில் முழு பணத்தை திரும்ப பெறலாம்.
1. பயணிகளில் ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் திரும்ப பெறலாம். ஆனால் அதிலும் ஒரு விதிமுறை. ரயில் முதலில் கிளம்ப இருக்கும் நிலையத்தில் இருந்தே தாமதம் ஆனால் மட்டுமே முழு பணம் திரும்ப அளிக்கப்படும். இடையே வரும் நிலையத்திலோ அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் ஏறும் நிலையத்தில் இருந்து தாமதம் ஆனால் முழு பணம் கிடைக்காது.
2. ஒருவேளை நீங்கள் பயணிக்கும் ரயில் குறிப்பிடப்பட்ட பாதையில் இருந்து வேறு பாதை வழியே பயணித்தால், அந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பாமல் நீங்கள் ரத்து செய்தால், முழு பணம் கிடைக்கும்.
3. ஒருவேளை ரயில் வழித்தடம் மாற்றப்பட்டு, நீங்கள் ஏற இருந்த ரயில் நிலையத்திற்கு ரயில் வரமால் போனால், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுக்கு முழு பணம் கிடைக்கும்.
4. தட்கலில் டிக்கெட் புக் செய்து உங்களுக்கு ஒரு கோச்சில், டிக்கெட் புக் செய்து ஆனால் பயணிக்கும் போது அந்த பர்த்தில் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கவில்லையென்றால் பணம் வாபஸ் தரப்படும்.
5. லோயர் கிளாஸ் பயணத்தை மேற்கொண்டால் அப்போது டிக்கெட் பணம் முழுமையாக திருப்பித் தரப்படும்.
ரயில் பயணிகளின் கவனத்திற்கு... டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்