/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-30T124619.210.jpg)
ஐஆர்சிடிசி, ரயில்வே முன்பதிவு, ரயில் இருக்கை விவரம்
How to Link aadhaar card with irctc account: ஐ.ஆர்.சி.டி.சி. உடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொண்டால், கூடுதலாக 6 டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே, ஐ.ஆர்.சி.டி,சி. இணையதளத்தின் மூலம் எளிதாக ரயில் டிக்கெட் புக் செய்துவிடுவர். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் மாதம் ஒன்றிற்கு 6 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய அனுமதி அளித்து வருகிறது. இதனால், குறைவான நபர்களோடு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள முடிந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், ஐ.ஆர்,சி.டி,சி. ஒ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் எண்ணை இணைத்தால், 12 டிக்கெட்கள் வரை புக் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி அளித்துள்ளது.
How to link aadhaar with irctc account : ஐ.ஆர்.சி.டி.சி உடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திற்குள் செல்லவும்
யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யவும்
மை அக்கவுண்ட் பகுதியில், Link Your Aadhaar பிரிவை தேர்ந்தெடுக்கவும்
ஆதார் எண் அல்லது விர்சுவல் ஐடியை அதில் பதிவிடவும்.
Send OTP பட்டனை அழுத்தவும்
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு வரும்.
அந்த ஒன்டைம் பாஸ்வேர்டை பதிவிட்டு Verify OTP பட்டனை அழுத்தவும்.
பின் ஆதார் சரிபார்ப்பு நடவடிக்கைகக்காக அப்டேட் பட்டனை அழுத்தவும்.
ஆதார் சரிபார்ப்பு நிறைவடைந்தது என்ற பகுதி வந்தவுடன், மீண்டும் ஐஆர்சிடிசி அக்கவுண்டை லாகின் செய்து 12 டிக்கெட்கள் வரை புக் செய்து, சுற்றுலாவை நண்பர்களுடன் இனிமையாக கழிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.