Advertisment

ரயில் பயணிகளின் கவனத்திற்கு... டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்

Upgrade Your System to Book Tickets on IRCTC Website: விண்டோஸ் எக்ஸ்.பி அல்லது விண்டோஸ் சர்வர் 2003 வைத்திருப்பவர்கள் கணினிகளை உடனே அப்டேட் செய்வது அவசியம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Users Alert

IRCTC Users Alert

Upgrade Your Operating System to Book IRCTC E-Ticketing : ரயில் பயணம் மேற்கொள்ள அடிக்கடி ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்பவர்களா நீங்கள்? அப்போது உடனே நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது தான்...

Advertisment

விண்டோஸ் எக்ஸ்.பி அல்லது விண்டோஸ் சர்வர் 2003 வைத்திருப்பவர்கள் உங்கள் கணினிகள் உடனே அப்டேட் செய்வது அவசியம். ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.

IRCTC Users Alert : ஐஆர்சிடிசி மின் பயணச்சீட்டு

அந்த தகவலில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பல முன்னேற்றங்களையும் பாதுகாப்பு வசதிகளை கொண்டு வருவதற்காகவும், இ-டெக்கெட் செயலியை TLS 1.2 ஓ.எஸ்-க்கு மாற்றுகிறார்கள். இந்த ஓ.எஸ் நவீனம், விண்டோஸ் எக்ஸ்.பி மற்றும் விண்டோஸ் 2003 கொண்ட கம்ப்யூட்டர்களில் வேலை செய்யாது. எனவே பயனாளிகள் தங்களின் கணினிகளை அப்டேட் செய்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கீழ் வரும் ஓ.எஸ் கொண்ட கணைகள் இனி இந்த தளம் செயல்படும்:

  • விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் சர்வர் 2008 (Windows Vista and Windows Server 2008)
  • விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 ஆர்2 (Windows 7 and Windows Server 2008 R2)
  • விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் சர்வர் 2012 (Windows 8 and Windows Server 2012)
  • விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் சர்வர் 2012 ஆர்2 (Windows 8.1 and Windows Server 2012 R2)
  • விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் சர்வர் 2016 (Windows 10 and Windows Server 2016)

 

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்தி ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் rஅயில் டிக்கெட் புக் செய்பவர்களே அதிகம். அதனால் பயனாளர்களின் தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில், TLS 1.1 and TLS 1.2 அதிநவீன ஓ.எஸ்-க்கு மாறவுள்ளனர். மேலும் பலரும் தற்போது விண்டோஸ் 7 மற்றும் 10 உபயோகிப்பதாலும், விண்டோஸ் 7 பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா?

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment