IRCTC Andaman Package: அந்தமான் டூர், ஸ்கூபா டைவிங், படகு சவாரி... எல்லாமே 16890/-க்குள்!

IRCTC Package Tour: ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தை ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் அறையை மட்டுமே பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும்.

 IRCTC Andaman Delight Holiday Tour ex Port Blair Package: ஐ.ஆர்.சி.டி.சி  அந்தமானுக்கு நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்கள் கொண்ட டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜின் பெயர் ”அந்தமான் டிலைட் ஹாலிடே டூர் எக்ஸ் போர்ட் பிளேயர்”. அக்டோபர் 3, 2019 அன்று இந்த டூரின் பயணம் தொடங்குகிறது. இந்த சமயத்தில் நீங்கள் அந்தமானை சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன. இது மொத்தம் 572 தீவுகள், தீவுகள் மற்றும் பாறைகளின் குழுவாக அமைந்திருக்கிறது. இந்த டூர் பேக்கேஜ் 15 பேர் கொண்ட குழுவுடன் ஸ்டேண்டர்டு வகுப்பில் ஒரு நபருக்கு ரூ 16,890 செலவில் சென்று வரலாம். டீலக்ஸில், ஒரு நபருக்கு ரூ 19,450 செலவாகும். இருப்பினும், இரண்டு பேர் மட்டும் இருந்தால், ஸ்டேண்டர்டு வகுப்பில் ஒரு நபருக்கு ரூ 19,855 ஆகவும், டீலக்ஸில் ரூ 22,420 ஆகவும் கட்டணம் மாறுபடும்.

இந்த பேக்கேஜில் எல்லா இடங்களிலும் இரட்டை பகிர்வு அடிப்படையில் ஏர் கண்டிஷனிங் தங்குமிடம், விமான நிலைய பிக் அப், ட்ராம்,  நுழைவு அனுமதி, நுழைவுச் சீட்டுகள், படகுச் சீட்டுகள் மற்றும் வனப்பகுதி அனுமதி உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய முழு நாள் சுற்றுப்பயணம், பொருந்தக்கூடிய இடங்களில், MAP-ல் உணவு ( நான்கு காலை உணவுகள் மற்றும் நான்கு இரவு உணவுகள்) மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து வரிகளும் அடங்கும்.

IRCTC Andaman tour package

IRCTC Andaman

டிப்ஸ், லாண்டரி, தொலைபேசி பில்கள், குளிர் பானங்கள், போர்ட்டர் வசதி, காப்பீடு, மதுபானம், ரூம் சர்வீஸ், கேமரா கட்டணம், தொலைபேசி அழைப்புகள், மூலிகை மசாஜ் போன்ற அனைத்து வகையான தனிப்பட்ட செலவுகளும் இந்த பேக்கேஜ் செலவின் கீழ் வராது. ஐ.ஆர்.சி.டி.சி விதிகளின் படி, ரத்துசெய்யும் கட்டணங்கள் நிறுவனத்தின் கொள்கையின்படி தான் ரீ ஃபண்ட் செய்யப்படும். பயணத்தை ரத்து செய்யும் போது, விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

போர்ட் பிளேரில் தங்குவதற்கான ஹோட்டல்கள் தரத்தில் ஸ்டாண்டர்டுக்கு ஒயிட் கோரல் மற்றும் டீலக்ஸில் ஹோட்டல் ட்ரிஃப்ட்வுட் ஆகியவை ஒதுக்கப்படும். ஹேவ்லாக்கில் இருக்கும் போது, எல்டோராடோ பீச் ரிசார்ட் ஸ்டேண்டர்டுக்கும்மற்றும் என்.கே. ஈகோ ரிசார்ட் டீலக்ஸுக்கும் பயன்படுத்தப்படும்.

விதிமுறைகளின் படி, ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தை ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் அறையை மட்டுமே பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு விமான டிக்கெட் தேவைப்படும். மேலும், 2 வருடங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டாயமாக தேவை. பயணத்தின் படி பார்வையிடல் இருக்கும்.

IRCTC Andaman 2

ஐ.ஆர்.சி.டி.சி அந்தமான் டூர்

இந்த பேக்கேஜில் கோர்பின்ஸ் கோவ் பீச், செல்லுலார் ஜெயில், படகில் ஹேவ்லாக் தீவு பயணம், உலக புகழ்பெற்ற ராதா நகர் கடற்கரை, கலா பதார், போர்ட் பிளேர், ரோஸ் தீவு போன்றவற்றிற்கான பயணங்கள் மற்றும் பார்வையிடல் ஆகியவை அடங்கும். ரோஸ் தீவில் தலைமை ஆணையர் மாளிகை போன்ற பழைய கட்டிடங்கள் உள்ளன. அரசு வீடு, தேவாலயம், பேக்கரி, அச்சகம், நீச்சல் குளம், கல்லறை போன்றவை அனைத்தும் அங்கு  பாழடைந்த நிலையில் உள்ளன. ஸ்கூபா டைவிங், சிறிய நீர்மூழ்கிக் கப்பல் சவாரி அல்லது படகு சவாரி போன்ற அனைத்து வகையான நீர் விளையாட்டுகளும் நார்த் பே தீவில் பிரபலம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close