விடுமுறை வரப்போகுது… அந்தமான் போகலாமா? அதுவும் IRCTC வசதியில்

IRCTC Andaman Holiday Tour Package: ஜாலியாக அந்தமான் செல்ல இந்திய சுற்றுலாத்துறையின் புதிய பேக்கேஜ்

By: Published: March 18, 2019, 10:18:17 AM

Andaman Islands IRCTC Tour Packages : விடுமுறை காலங்கள் நெருங்கத் துவங்கியுள்ளன. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடையப் போகிறது. அதே போல், விடுமுறை நாட்களும் தொடங்கவுள்ளது.

கடற்கரைகள், தீவுகள் என ஜாலியாக அசத்தலாக அந்தமான் செல்ல விரும்புபவர்களுக்கு இந்திய சுற்றுலாத்துறை புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மானுடவியல் அருங்காட்சியகம், கார்பைன்ஸ் கோவ் பீச், செல்லுலார் சிறை, கப்பற்படை அருங்காட்சியகம், ராதாநகர் கடற்கரை, காலா பாதர் கடற்கரை ஆகியவற்றை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.

Andaman Nicobar Islands IRCTC Tour Packages

இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான IRCTC இணையத்தில் உங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இந்த பேக்கேஜின் கீழ் தற்போது வெறும் 10 டிக்கெட்டுகளே காலியாக உள்ளது. என்னென்ன வசதிகள் இந்த பேக்கேஜில் அடங்கும் தெரியுமா?

  1. 3 இரவுகள் போர்டு பிளேரில் தங்கலாம்
  2. ஹாவ்லாக் பகுதியில் ஒரு இரவு தங்கும் வசதி உள்ளது.
  3. மூன்று பேர் தங்க வேண்டுமென்றால், கூடுதலான படுக்கையும் அளிக்கப்படும். இருப்பினும் 3 பேர் தங்கும் இந்த வசதி போர்ட் பிளேரில் மட்டுமே உள்ளது. ஹாவ்லாக்கில் இந்த வசதி கொடுக்கப்படாது.
  4. சுற்றுலாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்திலேயே பயணிகள் பிக் அப் மற்றும் டிராப் செய்யப்படுவார்கள்.
  5. தினமும் காலை உணவு வழங்கப்படும். ஆனால் அந்தமான் சென்றடையும் நாள் மட்டும் காலை உணவு கிடையாது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Irctc andaman package

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X