IRCTC Rail Connect mobile app for Android : செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில், IRCTC இணையத்தில் அல்லது செயலியில் டிக்கெட் பதிவு செயவதும் எளிதாகிவிட்டது.
ரயில் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளும் பயணிகளுக்கு, ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் எப்படி பதிவு செய்வது என்று தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பாலானோர் செயலியை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். இணையத்தளம் போலவே செயலியிலும் அதே எளிமையான முறையில் டிக்கெட் பதிவு செய்யலாம்.
IRCTC app for Android : ஐஆர்சிடிசி செயலி
கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த செயலியை டவுன்லோடு செய்யும் வசதி உள்ளது. ஐபோன் வைத்திருப்பவர்களும் தற்போது இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் கொண்ட சேவை உள்ளது. என்னென்ன என்பதை பட்டியலிடுகிறோம்:
1. ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும்போதும், உங்கள் பெயர் மற்றும் பாஸ்வர்டு விவரங்களை கொடுக்க வேண்டிய அவசியம் செயலியில் இல்லை.
2. முதலில் சிஎன்எஃப் நிகழ்தகவு சோதனை மூலம் உங்கள் இரயில் பயணத்தை திட்டமிடலாம். அதற்கு நீங்கள் உங்களின் தொடக்கம் மற்றும் முடிவு ரயில் நிலையத்தின் பெயர்கள், தேதி மற்றும் ரயிலை தேர்வு செய்தால் போதும்.
3. உங்களுக்கு சவுகரிமான சீட் தேர்வு செய்த பிறகு, பயணிகளின் முழு விவரங்கள் கொண்டு டிக்கெட் பதிவு செய்யலாம்.
4. இந்த டிக்கெட் பதிவுகளை சுமார் 6 ரயில்கள் பயணிகள் ஒன்றாக பயணிக்க பதிவு செய்யலாம்.
5. இந்த செயலி, பெண்கள், தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் முதியவர்களுக்காக லோயர் பர்த் வசதி கொண்ட சிறப்பு சலுகைகளை அளிக்கிறது.
6. இந்த செயலி மூலம் பயணிகள் PNR ஸ்டேட்டஸ் அறிந்துக் கொள்ள முடியும்
7. பயணம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டால் உங்களில் டிக்கெட்டையும் ரத்து செய்துக்கொள்ளலாம்.
8. புக் எ மீல் என்ற புதிய சேவையையும் இந்த செயலி வழங்குகிறது. இந்த சேவையின் மூலம் ஓட்டல்களில் உணவுகளும் உங்களின் ரயில் சீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்.
9. விகால்ப் திட்டத்தின் கீழ், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் இந்த செயலி மூலம் வேறு மாற்று ரயிலை கண்டுபிடிக்கும் வசதியும் அளிக்கப்படும். உங்கள் டிக்கெட் விவரங்கள் மற்றும் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டால் போதும்.
10. இந்த செயலி மூலம் நீங்கள் பதிவு செய்த பழைய டிக்கெட்டுகளையும் கேன்சல் செய்துக் கொள்ளலாம்.