IRCTC Epay Later: ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். சமீபத்திய தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) ’புக் நவ், பே லேட்டர்’ என்ற புதிய சேவையை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு “இ பே லேட்டர்” முறை உதவிகரமாக இருக்கும்.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இந்த “இ பே பின்னர்” சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது சில பணம் செலுத்தும் சில நொடியில், டிக்கெட் மிஸ்ஸாகி விடும். அத்தகைய நேரங்களில் இந்த ‘இ பே லேட்டர்’ முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இ-பே லேட்டர் வசதியை அர்த்த சாஸ்திரா ஃபிண்டெக் பிரைவேட் லிமிடெட் வழங்கும் டிஜிட்டல் கட்டண தீர்வாகும். டிக்கெட் முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். 14 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், 3.50% வட்டியும் சேர்த்து கட்ட வேண்டும்.
ஐஆர்சிடிசி அக்கவுண்டை லாக் இன் செய்துக் கொள்ளவும்.
பயண விபரத்தைக் குறிப்பிட்டு, டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்.
பணம் செலுத்தும் பக்கத்தில், ‘இ பே லேட்டர்’ என்ற ஆப்ஷன் இருக்கும்.
அதை க்ளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்.
உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, இ பே லேட்டரை லாக் இன் செய்யவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை சரியாகக் குறிப்பிடவும்.
முன்பதிவு தொகையை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும், அவ்வளவு தான் டிக்கெட் உறுதியாகிவிடும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Irctc booking e pay later
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி