IRCTC Train Schedule, PNR Status: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி, தனது வலை தளமான www.irctc.co.in மூலம் பல சேவைகளை வழங்குகிறது.
Advertisment
இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல், ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுப்பயணங்கள், ஹோட்டல் முன்பதிவு, பயண மாற்றம், விமான டிக்கெட் முன்பதிவு தவிர, பயணிகள் ரயிலை ட்ராக் செய்யவும், பி.என்.ஆர் நிலையை சரிபார்க்கவும், ரயில் கால அட்டவணையை சரிபார்க்கவும் வசதி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு இல்லாத பயனர்கள் ரயிலை ட்ராக் செய்யவும், பி.என்.ஆர் நிலையை சரிபார்க்கவும், ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திலிருந்து ரயில் அட்டவணையை சரிபார்க்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்கூறிய வசதிகளைப் பயன்படுத்த, பயனர் ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்கு விசிட் செய்ய வேண்டும். பின்னர் முகப்புப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘ரயில்கள்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ‘ரயில்கள்’ விருப்பத்தின் கீழ், ‘பி.என்.ஆர் என்கொயரி, ‘ரயில் அட்டவணை’ மற்றும் ‘ரயிலைக் கண்காணித்தல்’ ஆகியவற்றுக்கான இணைப்புகள் உள்ளன. பிஎன்ஆர் நிலையைச் சரிபார்க்க, ‘ரயில்களின்’ கீழ்தோன்றும் மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள ‘பி.என்.ஆர் என்கொயரி’ என்பதை கிளிக் செய்யலாம். இந்த இணைப்பு உங்களை வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அதில் நீங்கள் பிஎன்ஆர் நிலையை சரிபார்க்க பிஎன்ஆர் எண்ணை பதிவிடலாம்.
Advertisment
Advertisements
இதேபோல், ரயிலின் அட்டவணையை சரிபார்க்க ‘ரயில் அட்டவணை’ என்பதை கிளிக் செய்யலாம். அப்போது புதிய பக்கம் திறக்கும். இந்தப் பக்கத்தில், எந்த ரயிலைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமோ, அதை பதிவிடவும். அப்போது ரயில் கிளம்பும் ஸ்டேஷன், கடைசியாக சென்று சேரும் நிலையம், பாதை, வருகை, அனைத்து நிலையங்களிலும் புறப்படும் நேரம், ஒரு வாரத்தில் இயக்கப்படும் நாட்கள், நிலையக் குறியீடு, ரயில் நிலையங்களுக்கு இடையிலான தூரம், ரயிலின் பெயர் மற்றும் நிறுத்தப்படும் நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும்.
ஒரு ரயிலைக் கண்காணிக்க, ‘ட்ராக் யுவர் ட்ரெயின்’ என்பதை பயனர்கள் கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தேசிய ரயில் விசாரணை அமைப்பின் (என்.டி.இ.எஸ்) பக்கம் புதிதாக திறக்கும். ரயிலை ட்ராக் செய்ய, ரயில் எண்ணை பதிவிட வேண்டும். பிறகென்ன கிளம்பும் நிலையம் தொடங்கி, நிறுத்தம் வரைக்கும் அனைத்துத் தகவல்களும் சில நொடிகளில் உங்கள் பார்வைக்கு வந்துவிடும்.