ரயில்களை முன்பதிவு செய்யும் IRCTC.co.in -ல், பயணிகளை கவரும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி., பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. இருப்பினும், பயணத்தின் போது, டிக்கெட் நகலையும் கையோடு எடுத்து செல்ல வேண்டியிருந்தது.இதனை மேலும் எளிமையாக்கும் விதமாகவும், காகித பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் விதமாகவும், யு.டி.எஸ்., எனும் மொபைல் செயலியை ரயில்வே துறை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது 5 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்களில் முன்பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகள், உறுதியாகக் கிடைக்குமா என்பதை இனி உடனுக்குடனே தெரிந்துகொள்ளலாம் என்ற வசதியை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC.co.in
தற்போது உள்ள அப்டேட்டின்ன்படி, ரயில் டிக்கெட்டை முன்பதி செய்வோர் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதி ஆகுமா? அல்லது வெடிட்டிங் லிஸ்டில் இருக்கும் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்ற எந்தவித உறுதியான தகவலையும் தெரிந்துக் கொள்ள முடியாமல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் இப்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, முன்பதிவுசெய்த டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படுமா என்பதை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமே யூகித்துச் சொல்லிவிடும். இதற்கேற்ப, இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு குறுங்தகவலும் அனுப்பட்டு உறுதி செய்யப்படும்.