Indian Railways IRCTC Mobile App Offers 5 Payment Gateways : இனி ரயில் பயணம் மேற்கொள்ளும்போது, IRCTC Rail Connect செயலி மூலம் 5 விதத்தில் டிக்கெட் கட்டணத்தை எளிமையாக செலுத்தலாம்.
IRCTC Rail Connect செயலியில் 5 விதமாக பணம் செலுத்து முறை அறுமுகமாகியுள்ளது. இந்த முறையினால் அரசு வங்கி மற்றும் தனியார் வங்கி என அந்த வங்கியின் அக்கவுண்டில் இருந்தும் பணம் செலுத்தலாம்.
IRCTC Mobile App Offers 5 Payment Gateways : ஐ.ஆர்.சி.டி.சி செயலி
இந்த திட்டத்தின் முழு நோக்கமே, பயணிகளுக்கு டிக்கெட் புக்கிங் முறையை எளிமைப்படுத்துவது, வேகமாக டிக்கெட் பெற உதவுவது மற்றும் பாதுக்காப்பான பணப் பறிமாற்றம் செய்ய உதவுவது தான்.
எப்படியெல்லாம் பணம் செலுத்தலாம்:
- நெட் பேங்கிங்
- டெபிட் கார்டு
- கிரெடிட் கார்டு
- யுபிஐ அல்லது பிஎச்ஐஎம்
இந்த எல்லா கட்டணம் செலுத்தும் வழிகளையும் 5 வெவ்வேறு தளங்களும் அளிக்கிறது. இவரை அனைத்தும் IRCTC Rail Connect செயலியின் உள்ளேயே அடங்கும். இந்த பயன்பாட்டின் மூலம் பொதுமக்கள் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட அருமையான வாய்ப்பு இது
அதிலும், தட்கல் புக்கிங் செய்பவர்கள் காலை 10 மணிக்கு படும் அவதியை அவ்வளவு எளிதாக கூறி விட முடியாது. இணையத்தின் முன்பு உட்கார்ந்து வேக வேகமாக புக் செய்து ஒரு டிக்கெட்டை பெறுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.
தற்போது IRCTC Rail Connect செயலியின் உள்ளே அடங்கியிருக்கும் இந்த 5 விதமான கட்டண செலுத்தும் முறையின்படி எளிமையாகவும், வேகமாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.
எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா? உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி