IRCTC E-Ticket Print Can Be Taken With PNR Number: ரயில் டிக்கெட்டை ஆன் லைனில் புக் செய்தாகிவிட்டது. அதை டவுன்லோடு செய்து கையில் வைத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள். அது ஒன்றும் மலையை சுமக்கிற வேலையல்ல. மிகச் சுலபமான படிநிலைகளில் அந்த வழி முறையை கீழே காணலாம்.
ரயில் டிக்கெட்டை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் புக் செய்கிறோம். அதன்பிறகு நமது செல்போனில் வருகிற மெசேஜை மட்டும் வைத்துக்கொண்டு, உரிய ஒரிஜினல் அடையாள அட்டையையும் கையில் வைத்துக்கொண்டால் போதுமானது. ரயிலில் வரும் ‘செக்கிங்’கின்போது நமது இருக்கை எண்ணை கூறிவிட்டு, அடையாள அட்டையை சமர்ப்பித்தால் ஓ.கே.!
ஆனாலும் பலருக்கு ஆன் லைனில் பதிவு செய்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொண்டால்தான் நிம்மதி! மொபைல் போன்களை கையில் வைத்திருக்க விரும்பாதவர்கள், வயதானவர்கள் சிலரும் பிரிண்ட் அவுட்டை எடுத்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
அதனாலென்ன.. இதோ சிம்பிளான டவுன்லோடு முறை:
1. முதலில் உங்கள் டிக்கெட் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். வேறு எங்கு டிக்கெட்டை எடுத்தாலும், பிரிண்ட் அவுட் எடுக்க முடியாது.
2. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி இணையதள முகவரியில் நுழைந்து பி.என்.ஆர். எண், மொபைல் எண், கேப்ச்சா ஆகியவற்றை சரியாக பதிவு செய்யவும்.
3. ‘சப்மிட்’ பட்டனை அழுத்தினால், ஒரிஜினல் டிக்கெட் டிஸ்பிளே ஆகும்.
4. அதன்பிறகு ‘பிரிண்ட்’ ஆப்ஷன் அல்லது ‘கண்ட்ரோல் பிளஸ் பி’ அழுத்தினால் டிக்கெட்டின் பி.டி.எஃப் ஃபைல் கிடைக்கும்.
இ டிக்கெட்டுடன் பயணிக்கும்போது, ஒரிஜினல் அடையாள அட்டை வைத்திருப்பது மிக முக்கியம்.