கோவாவுக்கு டூர் போறீங்களா? 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்!

தனிப்பட்ட  பொருட்கள், சலவை, மருந்துகள், நினைவுச் சின்னங்களுக்கான நுழைவு கட்டணம், டூர் கைடின் சேவை உள்ளிட்டவைகள் இந்த பேக்கேஜில் வராது. 

IRCTC Goa special Tour package
IRCTC Goa Trip

IRCTC Goa Special Tour: நீங்கள் கோவா செல்ல திட்டமிட்டிருந்தால், இப்போது 5,000 ரூபாய்க்கும் குறைவாக போகலாம். ஐ.ஆர்.சி.டி.சி, ஜி.எஸ்.டி உட்பட ஒரு நபருக்கு ரூ .4,725-க்கு ‘கோவா ஸ்பெஷல்’ எனப்படும் நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்கள் கொண்ட டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலாவுக்காக முன்பதிவுகளை ஐ.ஆர்.சி.டி.சி-யின் சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் செய்யலாம்.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை எக்மோர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, ஷரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய இடங்கள் இந்த சுற்றுலாவுக்காக போர்டிங் பாயிண்டுகள். அதோடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, ஷரனூர், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை எக்மோர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்கள் டீபோர்டிங் ஸ்டேஷனாகவும் இருக்கும். இந்தப் பயணம் பட்ஜெட் வகுப்பில் பாரத் தர்ஷன் ரயிலில் இருக்கும். ரயில், மதுரை ரயில்நிலையத்திலிருந்து நள்ளிரவு 00:05 மணிக்கு புறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 5, 2019 அன்று தொடங்குகிறது.

IRCTC Special Goa Trip
IRCTC Special Goa Trip

இந்த பேக்கேஜ் ஸ்லீப்பர் வகுப்பு, தர்மசாலாவில் இரவு தங்குதல், காலை தேநீர், காபி, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் குடிநீர் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. எஸ்.ஐ.சி அடிப்படையில் சாலைப்போக்குவரத்து, டூர் எஸ்கார்ட் மற்றும் பாதுகாப்பும் ரயிலில் சேர்க்கப்படும். டூர் பேக்கேஜில் சில விதிவிலக்குகள் உள்ளன. அதாவது தனிப்பட்ட  பொருட்கள், சலவை, மருந்துகள், நினைவுச் சின்னங்களுக்கான நுழைவு கட்டணம், டூர் கைடின் சேவை உள்ளிட்டவைகள் இந்த பேக்கேஜில் வராது.

மோடி – ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின்படி, “பாரத் தர்ஷன் சுற்றுப்பயணங்களை பயன்படுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி-யின் விடுப்புப் பயண சலுகை (எல்.டி.சி) வழங்கப்படும். (ரயில் கட்டணம் மற்றும் சாலைப்போக்குவரத்து கட்டணம் மட்டுமே இதில் சேர்க்கப்படும்)” என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 5 முதல் டிசம்பர் 9, 2019 வரை இந்த சுற்றுலாவில் செயின்ட் கதீட்ரல், பசிலிக்கா ஆஃப் போம் ஜீசஸ், கலங்குட் பீச், ரிவர் க்ரூஸ் போன்ற பல இடங்கள் சுற்றிக் காட்டப்படும்.

IRCTC Special Goa Trip
IRCTC Special Goa Trip

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. பயணிகள் பரிந்துரைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே ஏறி இறங்க வேண்டும். உள்ளூர் போக்குவரத்து செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. ஐ.ஆர்.சி.டி.சி-யின் தீர்மானித்த பேக்கேஜ் டூரில் ஸ்லீப்பர் வகுப்பு / மூன்றாம் ஏசி ரயில் டிக்கெட், சைவ காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு, ஹால் வகை / ஹோட்டலில் தங்கும் வசதி மற்றும் உள்ளூர் இடங்களுக்கு செல்லும் பஸ் கட்டணம் ஆகியவை மட்டுமே அடங்கும்.

3. அடையாள அட்டை (ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவை) ரயில்வே அதிகாரிகளின் சரிபார்ப்புக்காக கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc goa special tour package starts rs

Next Story
”படங்களின் வசூலைப் பாருங்கள்.. இந்திய பொருளாதாரத்தில் மந்தம் இல்லை” சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றார் அமைச்சர்ravi shankar prasad on economic slowdown, Ravi Shankar Prasad denies economic slowdown, india economic slowdown, ரவிசங்கர் பிரசாத், பொருளாதார மந்தநிலையை மறுத்த ரவிசங்கர் பிரசாத், 3 படங்கள் ஒரே நாளில் ரூ.120 கோடி வசூல்,Three movies made Rs 120 crore in a day, ravi shankar prasad bollywood movie collection, bollywood movie success economy slowdown, india news, Tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com