Advertisment

வெயிடிங் லிஸ்ட் பயணிகளாக இருப்பவர்களுக்கு இனிமேல் இந்த தொல்லை இல்லை!

IRCTC Indian Railway Vikalp Scheme : இதற்காக அவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc train ticket booking

irctc train ticket booking

IRCTC Vikalp Scheme : ரயிலகளில் பயணிப்பவர்களில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்காக , இந்தியன் ரயில்வே நிர்வாகம்  'விகல்ப்' திட்டத்தில் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

 IRCTC Vikalp Scheme :  விகல்ப் திட்டம்!

வெயிட்  லிஸ்டில் பயணிக்கும் பயணிகள், ஐஆர்சிடிசி -  யில் இடம் பெற்றிருக்கும்  விகல்ப்  திட்டத்தின் மூலம்    மாற்று ரயில்களில் இடம் இருந்தால்  அதை உறுதிச் செய்யப்பட்ட பயணசீட்டாக மாற்றிக் கொள்ள முடியும்.  படுக்கை வசதிக் கொண்ட  இருக்கையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அறிவிப்பை இந்தியன் ரயில்வே அதிகாரப்பூர்வமாக  தெரிவித்துள்ளது.   பயணிகள்  எண்ணி 5 ரயில்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

விகல்ப் திட்டத்தில் உள்ள வசதிகள்:

1. இந்திய இரயில்வே விக்கால்ப் திட்டம் அனைத்து ரயில் சேவைகளிலும் செயல்படுத்தப்படுகிறது

2. ஒதுக்கீடு மற்றும் சலுகையைல் என அனைத்து காத்திருக்கும் பட்டியல் பயணிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

3. இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் அதிகபட்சம் 5 ரயில்கள் தேர்ந்தெடுக்கலாம்.

4. விக்கால்ப் திடம் மூலம் முன்பதிவு செய்த காத்திருப்பு பயணிகளுக்கு அந்த ரயிலில் சீட்  கிடைக்கவில்லை என்றால் மட்டுமே மற்ற ரயில்களில் இடம் தரப்படும்

5. முழுமையாக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் சார்ட் தயார் செய்யும் முன்னே பி.என்.ஆர் என்னை பார்க்க வேண்டும்

6. பயணிகள் இடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படுவதில்லை

7. காத்திருப்பில் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ரயிலை தந்தப்பின் முன்பதிவு செய்த ரயிலில் எற கூடாது

8. மற்றொரு ரயிலில் இடம் கொடுத்தலும் சாதாரண பயணிகளுக்கான வசதிகள்தான் கிடைக்கும்.

9. மாற்று ரயில் இடம் தந்தப்பினும் சில சமயங்களில் மீண்டும் ரயில் மாற்றம் ஏற்படலாம். இதனால் பி என் ஆர் என்னை சரி பார்ப்பது அவசியம்

10. விக்கால்ப் திட்டத்தில் மற்றொரு ரயிலில் இடம் கொடுத்த பின் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்

11. ரயில் கிடைத்த பிறகு எந்த மாற்றத்தையும் பயணிகள் செய்ய முடியாது, கேன்சல் தான் செய்ய வேண்டும்.

விக்கால்ப் திட்டத்திற் கீழ் தேர்ந்தெடுக்கப் படும் மாற்று ரயிலைகள் ஒரு தடவைக்கு மேல் மாற்ற முடியாது.

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment