Advertisment

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - ஸ்டேஷனுக்கு அருகில் வணிக வளாகங்கள்

தமிழ் நாடு மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரவுள்ளன. பல் செயல்பாட்டு வளாகங்களுக்கான 15 இடங்களின் பட்டியல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian railways, railways, இந்திய ரயில்வே,

Indian railways, railways, இந்திய ரயில்வே,

இந்திய ரயில்வே 15 பல் செயல்பாட்டு வளாகங்களை (multi-functional complexes) நிறுவ உள்ளது. 15 பல் செயல்பாட்டு வளாகங்களை உருவாக்கி குத்தகைக்கு விடுவதற்காக இந்திய ரயில்வேயின் Rail Land Development Authority (RLDA) 2 முன்மொழிவுக்கான கோரிக்கைகளை (Request for Proposal- RFPs) விடுத்துள்ளது. மொத்தம் 22,941 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட முன்மொழியப்பட்டுள்ள இடங்களில் பல் செயல்பாட்டு வளாகங்கள் உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும். RLDA பகிர்ந்துள்ள விவரங்களின்படி பல் செயல்பாட்டு வளாகங்கள் சம்பந்தப்பட்ட ரயில் நிலைய வளாகங்களுக்கு அருகிலும் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளிலும் உருவாக்கப்படும். இந்த பல் செயல்பாட்டு வளாகங்களுக்கான 15 மனைகள் 250 சதுர மீட்டர் முதல் 4850 சதுர மீட்டர் வரையிலான வரம்புக்குள் வரும். மேலும் இந்த பல் செயல்பாட்டு வளாகங்கள் குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடக, ராஜஸ்தான், பீகார், தமிழ் நாடு மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரவுள்ளன. பல் செயல்பாட்டு வளாகங்களுக்கான 15 இடங்களின் பட்டியல்

Advertisment

Siuri in Birbhum, West Bengal

Balurghat in Dakshin Dinajpur, West Bengal

Malda Town in Malda, West Bengal

கால்வானில் மீண்டும் சீனா! அதிர்ச்சியூட்டும் சாட்டிலைட் புகைப்படங்கள்;

Madarihat in Alipurduar, West Bengal

Rohtak, Haryana

Durgapur in Paschim Bardhaman, West Bengal

Raja Ki Mandi in Agra, Uttar Pradesh

Kanchrapara in North 24 Parganas, West Bengal

Nadiad in Kheda, Gujarat

Sasaram in Rohtas, Bihar

Tiruchifort in Tiruchirappalli, Tamil Nadu

Gulbarga, Karnataka

Sikar, Rajasthan

Bellary, Karnataka

Bharatpur, Rajasthan

இந்த பல் செயல்பாட்டு வளாகங்களில் ஏடிஎம் கள், புத்தக நிலையங்கள், உணவு விடுதிகள், ரெஸ்டாரண்டுகள், மருந்து மற்றும் பல் பொருள் அங்காடிகள், வாகன நிறுத்தம், பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கான இதர வசதிகளும் வரவுள்ளன. இவை இந்திய ரயில்வேயின் செயல்பாட்டு கட்டிடங்கள் என்று அறிவிக்கப்படுவதால் இந்த பல் செயல்பாட்டு வளாகங்களை உருவாக்க உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எந்த அனுமதியும் தேவைஇல்லை.

எங்கள் ஆட்சியின் சாதனையை எடுத்து சொல்ல கொரோனா தடையாக உள்ளது - நிதி அமைச்சர்

இந்த பல் செயல்பாட்டு வளாகங்கள் ரயில் நிலைய நடைமேடைகளிலிருந்து நடந்து சென்று அடையும் தூரத்தில் அமைக்கப்பட்டு, ரயில் பயணிகளுக்கு தேவையான அனைது மேம்பட்ட வசதிகளையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் என்பதால் அதிகப்படியான மக்கள் இந்த வளாகங்களை பயன்படுத்துவர், என RLDA வின் Vice Chairman Ved Parkash Dudeja தெரிவித்தார். இந்த வளாகங்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் ஓடை வசதிகளை ரயில்வேயே செய்துக் கொடுக்கும்.

ஏற்கனவே 52 பல் செயல்பாட்டு வளாகங்களை RLDA பல டெவலப்பர்களுக்கு 45 ஆண்டு குத்தகைக்கு கொடுத்து விட்டது. இதில் 13 பல் செயல்பாட்டு வளாகங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மீதம் உள்ள வளாகங்கள் கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment