Advertisment

IRCTC Ticket Cancellation Rules : ஐஆர்சிடிசி -யில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

E-Ticket Cancellation Not Allowed After Chart Preparation: www.irctc.co.in தளத்தில் 2 டிக்கெட்கள் மட்டுமே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc train ticket booking

irctc train ticket booking

IRCTC Ticket Cancellation Rules 2019 : ஐஆர்சிடிசி இணையதளமான www.irctc.co.in மூலமாக இந்திய ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 120 நாட்கள் முன்னதாகவே புக் செய்ய முடியும். இந்தச் சேவையினை மேலும் மெறுகேற்ற்வும் விதமாக ரயில்வே அமைச்சகம் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

Advertisment

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தினைச் செலுத்தும் முறையினை அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்தது.

இந்த முறையினை இணையதளம், செயலி என ஐஆர்சிடிசி சேவையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பெறலாம். தட்கல் டிக்கெட் என்பது கடைசி நேரத்தில் வெளியூர் செல்ல முடிவு செய்தவர்கள் ஒரு நாள் முன்பு முன்கூடியே புக் செய்யப்படும் டிக்கெட் ஆகும். மேலும் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது அடையாள எண் குறிப்பிட வேண்டும் என்றும் பயணம் செய்யும் போது அதனைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

IRCTC Ticket Cancellation Rules 2019:தட்கல் வசதி மட்டுமில்லை ஐஆச்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. ஒரு ஐஆர்சிடிசி இணையதள ஐடி கீழ் மாதம் 6 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம். இதுவே ஒரு பயணி அல்லது ஐஆர்சிடிசி ஐடி வைத்துள்ளவர்கள் ஆதார் சரிபார்ப்பினை செய்தால் 12 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம்.

2. ஐஆர்சிடிசி பயனர் ஒருவரால் அட்வான்ஸ் ரிசர்வேஷன் நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 டிக்கெட்கள் மட்டுமே டிக்கெட்களைப் புக் செய்ய முடியும்.

3. ஒரு பயனரால் ஒரு நேரத்தில் ஒரு முறை மட்டுமே ஐஆர்சிடிசி ஐடியில் உள்நுழைய முடியும். அதாவது ஒரு ஐடியை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் ஒரே நேரத்தில் உள்நுழைய முடியாது.

4. ஐஆர்சிடிசி இணையதளத்தின் ஒரு பக்க குவிக் ரயில் டிக்கெட் புக் சேவையானது காலை 8 மணி முதல் பிற்பகள் 12 மணி வரை செயல்படாது.

5. ரயில் டிக்கெட் புக்கிங்கில் பாதுகாப்பினை அதிகரிக்கக் கூடுதல் விவரங்கள் பெறப்படும். அவை தான் பெயர் பெயர், மின்னஞ்சல், மொபைல் என், செக் பாக்ஸ் போன்றவை ஆகும். பயணிகள் விவரங்களை 25 நொடிகளில் நிரப்ப வேண்டும்.

உங்கள் ரயில் பயணத்தில் கடைசி 30 நிமிடம் போர்வை இருக்காது, ஏன் தெரியுமா?

6. காலை 10:00 மணி முதல் 12:00 மணி நேரத்தில் தட்கள் டிக்கெட்டினை ஒரு பயனர் ஐடியில் இருந்து 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய அனுமதி வழங்கப்படும். ஒரு செஷனில் ஒரு தட்கள் டிக்கெட் மட்டுமே புக் எய்ய முடியும். மேலும் ஒரு இணையதள ஐபி முகவரிக்குத் தட்கள் நேரமான காலை 10:00 மணி முதல் 12:00 மணி நேரத்தில் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment