IRCTC Offers Kerala Holiday Package for 5 Night 6 Days : 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ஐஆர்சிடிசி ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குளிர் காலம் என்றாலே சுற்றுலா பயணம் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் பலருக்கும் வந்துவிடும். அவ்வாறு டூர் செல்ல விரும்பும் மக்களுக்காக ஐஆர்சிடிசி பல டூர் பேக்கேஜ்ஜுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கோவா, தாய்லாந்து, ஊட்டி, காஷ்மீர் என பல இடங்களுக்கு செல்ல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC Kerala Holiday Package : ஐஆர்சிடிசி கேரளா டூர் பேக்கேஜ்
இந்த பட்டியலில் தர்போது புதிதாக இணைந்துள்ளது தான் கேரளா சுற்றுப்பயணம். ஐஆர்சிடிசி வழங்கும் 7 நாட்கள் கேரளா சுற்றுப்பயணத்தில், 5 இரவுகள் தங்கியும் 6 நாட்கள் வெளியே சுற்றிப்பார்த்தும் மகிழலாம்.
மதுரை - சென்னை விரைவு ரயில்... தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது
இந்த பயணத்தின்போது சுற்றுலா பயணிகள், கொச்சின், மூணார், தேக்கடி மற்றும் குமரகோம் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்க்கலாம். ஐதராபாத்தில் இருந்து தொடங்கும் இந்த பயணம், குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணிகளை இட்டுச்செல்லும்.
திருப்பதி, ராமேஸ்வரம், பத்மாவதி கோவிலுக்கு செல்ல வேண்டுமா? புதிய திட்டம்
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தொடங்க இருக்கும் இந்த பயணத்திற்கான கட்டணத்தை ஐஆர்சிடிசி தளத்திலேயே செலுத்தலாம். மேலும் இந்த சேவையில் விமானம் பயணமும் அடங்கியிருப்பதால், ஒரு நபருக்கு இந்த பேக்கேஜ்ஜின் விலை 23, 573 ரூபாய் ஆகும்.
IRCTC Kerala Holiday Package : கேரளா பேக்கேஜ் முழு விவரம் :
- நீங்கள் தங்கும் வசதியை தேர்ந்தெடுப்பதற்கு ஏற்ப விலை மாறுபடும். ஒரே ஒரு ஆள் மட்டும் தங்கும் வசதி வேண்டுமென்றார்ல், ரூபாய் 36, 571 ரூபாய் செலுத்த வேண்டும். பெரியவர்கள் இரண்டு பேர் மட்டும் தங்க, Rs. 25,418 கட்ட வேண்டும், மூன்று பேர் என்றால் 23,573 ரூபாயும், 2 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டிலுடன் 19,258 ரூபாயும் கட்டில் இல்லாமல் 16,885 ரூபாயும் செலுத்த வேண்டும்.
- ஐதராபாத்தில் தொடங்கும் இந்த கேரளா பயணத்திற்காக பயணிகள் விமானத்தின் மூலம் கொச்சினுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
விமானம் புறப்படும் நேரம் விவரங்கள்
- இந்த பேக்கேஜில் பெறப்படும் கட்டணத்தில் விமான டிக்கெட் செலவு, 4 நாட்கள் 3 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி மற்றும் 1 நாள் இரவு போட் ஹவுஸ்-ல் தங்கும் வசதி மற்றும் பயணம் காப்பீடு உள்ளிட்டவை அடங்கும்.
- இருப்பினும், உணவு செலவுகள் எதுவும் இந்த பேக்கேஜில் அடங்காது. உணவு மற்றும் பிற தனிப்பட்ட தேவைகளுக்காக செலவுகளை பயணிகளே மேற்கொள்ள வேண்டும்.