இந்திய ரயில்வே உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவின் தரம் என்ன?

இந்திய இரயில்வே உணவங்களில் தயாரிக்கப்படும் உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றதா, தரமானதா என்பதை அறிய புதிதாக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவங்கங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரத்தினை, உங்களின் செல்போன் மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றார். செயலி ஒன்றின் மூலமாக IRCTC சமையலறையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை நீங்கள் நேரடியாக உங்களின் அலைபேசியில் இருந்து பார்க்கும் வசதியினை ஏற்படுத்தி தர இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார். IRCTC இணையத்தில், IRCTC சமையலறையை நேரடியாக ஒளிபரப்பும் விதத்தில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் இன்றும் கோடிக்கணக்கானோர் இரயில் பயணங்களையே பெரிதும் நம்பி பயணங்களைத் தொடங்குகின்றார்கள். சில நேரங்களில் இரயில்வே துறையினால் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் எவ்வளவு சுகாதாரமாக தயாரிக்கப்படுகின்றது என்பதைப் பற்றிய எண்ணங்களும் சந்தேகங்களும் நம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதற்கு முற்றுப் புள்ளியாக அமைந்திருக்கின்றது இந்த அறிவிப்பு. அனைத்து IRCTC சமையலறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளே நடக்கும் சமையல் செய்யும் முறைகள் யாவும் இணையத்தில் நேரலையாக காட்சிக்கு வைக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் உதவியைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களின் தரம், வேலை செய்பவர்களின் யூனிபார்ம், மற்றும் இதர நடவடிக்கைகள், உணவு செய்யும் முறை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும். இதில் ஏதாவது மாறுதல்கள் அல்லது தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், இது தொடர்பான ஆய்வாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்படும்.

இந்தியாவில் மொத்தம் இயங்கிவரும் 200 IRCTC சமையலறைகளில் இருந்து நாளொன்றிற்கு சுமார் 12 லட்சம் உணவுப் பொட்டலங்கள் சமைக்கப்படுகின்றது. அதில் 10 லட்சம் உணவுப் பொட்டலங்கள் இரயிலில் பயணிப்போர்களுக்கு உணவாக தரப்படுகின்றது. இந்தியாவில் மொத்தம் 200 இடங்களில் IRCTC சமையலறைகள் இருக்கின்றன. ஆனால் இதில் வெறும் 15 சமையலறைகளில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பினை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில், சமைக்கப்படும் உணவின் தரம் மற்றும் இந்திய இரயில்வே துறையில் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். மிகச் சமீபத்தில் தான், இந்திய ரயில்வே “மெனு ஆன் ரயில்ஸ்” என்ற செயலியை பொதுமக்களின் செயல்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது. தற்போது மக்கள் அந்த செயலியினை தங்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களின் உபயோகமும் இரயில்வே துறையில் தற்போது அதிகமாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close