ஐஆர்சிடிசி முன்பதிவு பயணிகள் பணத்தை திரும்பப் பெற புதிய வசதிகள்
IRCTC Refund Rules 2019 : ஐஆர்சிடிசி-ன் அங்கீகரிக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுவனங்களில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
IRCTC Refund Rules 2019 : ஐஆர்சிடிசி-ன் அங்கீகரிக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுவனங்களில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
IRCTC Refund Rules 2019: New OTP-based refund system
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கானப் பணத்தை ஓடிபி அடிப்படையில் திரும்ப பெறுவதற்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
Advertisment
ஐஆர்சிடிசி ரீபன்ட் விதிகள் 2019:
ஐஆர்சிடிசி-ன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முன்பதிவு செய்யப்பட்ட இ-டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது, பணத்தை ரீபன்ட் வாங்கும் செயல் முறையை வெளிப்படைத் தன்மையாகவும், எளிமையானதாகவும் மாற்ற இந்த செயல்முறையை தொடங்கியுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதி மூலம், பயனர்கள் ஐஆர்சிடிசி-ன் அங்கீகரிக்கப்பட்ட நிருவனங்களில் டிக்கெட் புக் செய்யும் போது, தங்களது அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.
Advertisment
Advertisements
பயனர்கள் தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போதும், அல்லது வெய்டிங் லிஸ்ட் இருந்து டிக்கெட் உறுதி செய்யப்படாமல் இருக்கும் போதிலும், அந்த பயனர்களுக்கு ஒடிபி எஸ்எம்எஸ் ஒன்று ஐஆர்சிடிசி சார்பில் அனுப்பி வைக்கப்படும். இந்த எஸ்எம்எஸ் உடன் ரீபன்ட் தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும். பயனர்கள், அந்த ஒடிபி எஸ்எம்எஸ்-ஐ தங்கள் டிக்கெட்டை புக் செய்த ரயில் டிக்கெட் முன் பதிவு நிருவனங்களிடம் கொடுத்து ரீபன்ட் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " ஒடிபி எஸ்எம்எஸ்- ல் ரீபன்ட் தொகையும் அனுப்பப்படுவதால், வெளிப்படைத்தன்மை நிலை நாட்டப்படும்" என்று தெரிவித்தார்.
ஐஆர்சிடிசி-ன் அங்கீகரிக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுவனங்களில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டும் இந்த புதிய விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.