Advertisment

உங்களின் பயணத்தை எளிமையாக்கும் IRCTC .. டிக்கெட் புக் பண்ண இத்தனை வசதிகளா?

Easiest Way to Book Train Tickets Online on IRCTC: ரயில் கனெக்ட் செயலி மூலம் மிக எளிமையாக டிக்கெட் புக் செய்ய முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Next Generation E-Ticketing, இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதிகள்

IRCTC Next Generation E-Ticketing, இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதிகள்

ரயில்வே முன்பதிவென்றாலே இன்று பெரும்பாலும் ஆன்லைன்தான் என்றாகிவிட்டது. இதற்கான முன்பதிவு தளமான IRCTC தளம் ரயில் பயணிகளின் பயணங்களை வசதியாக்க எத்தனையோ வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இ- டிக்கெட் புக்கிங் வசதி தொடங்கி தட்கல் வரை நீங்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய வசதிகள்.

Advertisment

9 Convenient Ways to Book Train Ticket Online on IRCTC Official Website: ரயில் பயணம் மிகவும் எளிது.

தட்கல் டிக்கெட்டுகள் உட்பட, இ-டிக்கெட்களை பதிவு செய்வதற்கான ஒரு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி, அதன்படி ஐஆர்சிடிசி இ-வாலட் பயனர்கள் தட்கல் டிக்கெட், இ-டிக்கெட் போன்றவற்றை எளிமையாக பணம் செலுத்தி பெற முடியும். வாலட் என்பது பணம் செலுத்துதல் முறையாகும், இது ஐஆர்டிசிசி மூலம் முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு பயனர்களுக்கு உதவுகிறது.

இப்போது ஐஆர்சிடிசி இ-வாலட் பயனர்கள் , இ-டிக்கெட் , தட்கல் டிக்கெட் போன்றவற்றை மிக எளிமையாக முன்பதிவு செய்யமுடியும். குறிப்பாக இந்தப்பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. ரயில் ஏறும் இடத்தை மாற்றும் முறை:ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தபின் ஏதேனும் காரணங்களால் நீங்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஏறமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் உங்களால் வழியில் இருக்கும் இன்னொரு ரயில்நிலையத்திற்கு மாற்றமுடியும். இதற்கு நீங்கள் IRCTC - இருக்கும் Change boarding station' என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

2. ஓலா வசதி: இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா தற்சமயம் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் இணைந்துள்ளது. அதன்படி ரயில்வே பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் 7 நாட்களுக்கு முன்பே ஓலா வாடகை வண்டிகளை புக் செய்ய முடியும்.

3. ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலி மூலம் மிக எளிமையாக டிக்கெட் புக் செய்ய முடியும் இந்த செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த செயலியை மிக எளிமையாக ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.

4. அமேசான், ஃபிளிப்கார்ட்டை போன்று ரயில் டிக்கெட்டையும் வீட்டில் 'Cash on Delivery'-யாக பெறமுடியும். BookmyTrain என்ற செயலி மூலம் இதைச் செய்யலாம். சமீபத்தில்தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5. ஐஆர்சிடிசி வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும்.

6. IRCTC. நீங்கள் ஸ்லீப்பரில் முன்பதிவு செய்யும்போது 'Consider for Auto Upgradation' என்ற செக்பாக்ஸை டிக் செய்திருந்தால் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டலாம்.

7. பிரீமியம் தட்கல் என்ற பிரிவு டிக்கெட் வசதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

8. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது சிறிய எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிட்டால் கவலைகொள்ளவேண்டாம், டிக்கெட் பரிசோதனையாளரால் அதை மாற்றிக்கொள்ளமுடியும்.

படியுங்கள்... முதியோர்களும் பெண்களும் இனி லோயர் பெர்த் கேட்டு சண்டை போட வேண்டாம்... உங்களுக்கே முன்னுரிமை

9. கடைசி நேரத்தில் உங்களது பயணம் கேன்சல் ஆனால் இனி கவலை வேண்டாம். அதை உங்கள விருப்படி யாருக்கு வேண்டுமானாலும் மாற்ற முடியும். 24 மணிநேரங்களுக்கு முன் உங்களது இ-டிக்கெட்டை பிரிண்ட் செய்து உங்களது ID ப்ரூஃப் ஏதேனும் ஒன்றையும், மாற்ற நினைப்பவருக்கும் உங்களுக்குமான உறவை உறுதிசெய்யும் ஏதேனும் ஓர் ஆவணத்தையும் அங்கு கொடுத்தால் உங்கள் டிக்கெட் அவர் பெயருக்கு மாற்றித்தரப்படும்

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment