Advertisment

IRCTC டிக்கெட் முன் பதிவு : கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இவைதான்...

லாகின் இல்லாமலே காலியாக இருக்கும் சீட்டுகள் குறித்த விபரத்தை அறிந்து கொள்ள இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Next Generation eTicketing System

IRCTC Next Generation eTicketing System

IRCTC Next Generation eTicketing System : ஐ.ஆர்.சி.டி.சியில் நாம் நம்முடைய தாத்தா பாட்டிகள் மற்றும் அக்கா தங்கைகளுக்கு டிக்கெட் புக் செய்யும் போது, அவர்களின் பயணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து டிக்கெட் புக் செய்வோம். ஆனால் நாம் விரும்பிய பெர்த் நமக்கு எப்போதும் கிடைக்காது.

Advertisment

ஒரு வேளை இரண்டு லோயர் பெர்த்துகள் இருந்தால், அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவும் ஆப்சன்கள் இருக்கிறது.  ஆனால் இதில் நீங்கள் எந்த ஆப்சனையும் தேர்வு செய்யவில்லை என்றாலும், உங்களின் டிக்கெட்டுகளுக்கான பணம் உங்களின் அக்கௌண்டில் இருந்து டிடெக்ட் செய்யப்படும். உங்களின் பயணச் சீட்டும் புக் ஆகாது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையம் CRIS மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் உங்களின் இருக்கைகளை தேர்வு செய்து டிக்கெட் செய்யப்படும் போது, உங்களின் பணம், உங்கள் அக்கௌண்ட்டில் இருந்து டிடெக்ட் செய்யப்படும். பின்னர், ஐ.ஆர்.சி.டி.சி, உங்களுக்கான பெர்த்தினை CRIS-ல் புக் செய்யும்.

இப்படியாகவே மற்ற ஈ-காமர்ஸ் வெப்சைட் மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கான பெர்த்தும் இப்படி தான் புக் செய்யப்படுகிறது. பெர்த்துகளை புக் செய்யாதவர்களுக்கு அவைலபிலில் இருக்கும் பெர்த்துகள் தேர்வாகும்.

இது குறித்து CRIS இயக்குநர் முகேஷ் நிகம் தெரிவிக்கையில், நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் புக்கிங்குகள் நடந்து கொண்டிருப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் முதலில் புக் செய்பவர்களுக்கு சீக்கிரம் பெர்த் கிடைத்துவிடும். மற்றவர்களுக்கு கிடைக்காது என்று அவர் கூறினார்.

IRCTC Next Generation eTicketing System 

ஒருவேளை ஐ.ஆர்.சி.டி.சி உங்களின் அக்கௌண்ட்டில் இருந்து பணத்தை டிடெக்ட் செய்தும், உங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வார காலம் அந்த பணத்தினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

லோயர் பெர்த் தான் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அதனையே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.  150 பெர்த்துகள் அவைலபிள் இருந்தால் மட்டும் உங்களுக்கான பெர்த்துகளை தேர்வு செய்யுங்கள். 50 அல்லது 60 பெர்த்துகள் இருந்தால் தேர்வு செய்யும் ஆப்சனை கைவிட்டுவிடுங்கள்.

உங்களின் பணம் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றால், நீங்கள் ரெக்வெஸ்ட் அனுப்பலாம். ட்ரான்ஸாக்சன் நம்பருடன் நீங்கள் ரெக்வெஸ்ட் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி வாடிக்கையாளர்களுக்கு யூசர் ஃப்ரெண்ட்லி வெப்சைட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. லாகின் இல்லாமலே காலியாக இருக்கும் சீட்டுகள் குறித்த விபரத்தை அறிந்து கொள்ள இயலும்.

மை ட்ரான்ஸாக்சனில் இதற்கும் முன்பு சென்ற பயணம், தேதி, மேற்கொள்ள இருக்கும் புதிய பயணங்கள் ஆகியவையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். வெய்ட்டிங் லிஸ்ட் டீட்டெல்களை அதில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : திருப்பதி செல்ல வேண்டுமா ? ஐ.ஆர்.சி.டி.சியின் புதிய பேக்கேஜ்

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment